Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாராவுக்கு அடுத்தாண்டு டும் டும்.?

03 மே, 2019 - 19:26 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-to-tie-knot-soon

நடிகை நயன்தாராவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஏற்கனவே இருமுறை காதல் வயப்பட்டு, அந்தகாதல் தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது, இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் நெருக்கமாக உள்ளார். இருவரும் காதலித்து வருகின்றனர் என்பதற்கு அவர்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களே சாட்சி. ஆனாலும் தங்களது காதலை இதுவரை இருவரும் வெளிப்படையாக அறிவித்தது கிடையாது.

தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் நயன்தாரா. விக்னேஷ் சிவனும் இரண்டு படங்களை இயக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் இவர்களின் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விக்னேஷ் சிவன் குடும்பத்தாரை நயன்தாரா சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பின்போது இருவரது திருமணம் குறித்து பேசியதாக தெரிகிறது.

இந்தாண்டு இறுதியில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தமும், அடுத்தாண்டு தொடக்கத்தில் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. நயன்தாரா, தன் கைவசம் உள்ள படங்களை எல்லாம் முடிக்கவே இவ்வளவு காலம். விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
சர்வதேச படம் : முருகதாஸ், மகேஷ்பாபுவிற்கு ஹாலிவுட் நடிகர் அழைப்புசர்வதேச படம் : முருகதாஸ், ... கிரியேட்டிவ் புரட்யூசர் ஆக பணியாற்றும் புஷ்கர் - காயத்ரி கிரியேட்டிவ் புரட்யூசர் ஆக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
04 மே, 2019 - 17:59 Report Abuse
Vasudevan Srinivasan உழைத்தது போதும் நயன்தாரா அவர்களே தொழிலில் சிறந்து விளங்கிய நீங்கள் குடும்பத் தலைவியாகவும் வெற்றிபெற இறைவன் ஆசீர்வதிக்கட்டும்..
Rate this:
Ponniyin Selvan - Thanjavur,இந்தியா
04 மே, 2019 - 17:38 Report Abuse
Ponniyin Selvan குடி போயி பல வருஷமான வீட்டுக்கு கிரஹப்பிரவேசம் எதற்கு?
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
04 மே, 2019 - 16:14 Report Abuse
Endrum Indian சினிமாவில் Highly Experienced are needed always
Rate this:
04 மே, 2019 - 13:08 Report Abuse
Arul Krish who is that lucky man?
Rate this:
MATHIYALAGAN - Chennimalai,இந்தியா
04 மே, 2019 - 08:28 Report Abuse
MATHIYALAGAN விக்னேஷ் சிவனும் ஓரங்கட்டப்படுவார்.........
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in