நயன்தாராவின் 75வது படம் தொடங்கியது | அயோத்தி வெற்றி : இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சசிகுமார் | ராணி முகர்ஜி படத்திற்கு நார்வே எதிர்ப்பு | காமெடி நடிகர் மீது பாலியல் புகார் | 1500 கோடி சொத்தை சுருட்டவே 2வது திருமணம் : பவித்ராவின் முன்னாள் கணவர் குற்றச்சாட்டு | இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகும் 'காந்தாரா' | அன்பே மகிழ்ச்சி, மகிழ்ச்சியே அன்பு - விக்னேஷ் சிவன் | 'பத்து தல' - சிம்பு பட டிரைலர்களில் புதிய சாதனை | ஒரு வருடத்தைக் கடந்த 'எகே 62' அறிவிப்பு : புதிய அறிவிப்பு எப்போது வரும் ? | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருட்டு |
காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்த ஷில்பா மஞ்சுநாத், இந்த படங்களில் நடிப்பதற்கு முன்பே நடித்து முடித்த படம் பேரழகி ஐ.எஸ்.ஐ. இது அவர் அறிமுகபடமாக இருந்தாலும் மூன்றாவதாக வெளிவருகிறது. எடிட்டர் லெனின் உதவியாளர் விஜயன் இயக்கி உள்ளார்.
கதைப்படி ஷில்பாவின் பாட்டி சச்சு ஒரு பரிசோதனை மூலம் இளமை ஆகிவிடுவார். அந்த இளம் வயது சச்சுவாக ஷில்பா நடித்திருக்கிறார். அதே போல சச்சுவின் பேத்தியாகவும் நடித்திருக்கிறார். சச்சுவின் இளம் வயது தோற்றத்தில் அவரது மேனரிசத்துடன் நடித்து அசத்தியிருக்கிறாராம் ஷில்பா.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தப்படத்தின் கதையை இயக்குனர் விஜயன் சொன்னபோதே ஏதோ ஸ்பெஷல் என்று தோன்றியது. இரண்டு வேடங்களில் நடித்தது உண்மையிலே மிகப்பெரிய சவாலாகத்தான் இருந்தது. சச்சும்மா என் தோற்றத்திற்கு மாறியபின் நானும் அதேவிதமான நடிப்பை வழங்க வேண்டி இருந்தது. இதனால் நடக்கும் களேபரங்கள் எல்லாம் படத்தில் செம கலாட்டாவாக இருக்கும்.
இரண்டு வேடங்கள் தான் என்றாலும் கிட்டத்தட்ட நான்கைந்து விதமான நடிப்பை கொடுக்க வேண்டி இருந்தது. தற்போது ஒரு கன்னட படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் சில படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தாலும் நான் ஏற்கனவே நடித்த வேடங்கள் போன்றே உள்ளது. சவாலான கதாபாத்திரங்கள் என்றால் அதை மிஸ் பண்ணக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன் என்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.