தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' |
அட்டக்கத்தி தினேஷ் நடித்துள்ள படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. இதனை பா.ரஞ்சித் தயாரிக்க அவரின் உதவியாளார் அதியன் ஆதிரை இயக்கி உள்ளார். ஆனந்தி, தினேஷ் ஜோடியாக நடித்துள்ளார். அட்டக்கத்தி, விசாரணை, குக்கூ பட வரிசையில் இது எனக்கு முக்கியமான படம் என்கிறார் தினேஷ். அவர் மேலும் கூறியதாவது:
இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தை உலகின் எந்த நிலப்பரப்போடும் தொடர்பு படுத்தினாலும் அது அந்த நிலப்பரப்போடு பொருந்திப்போகும். ஒரு இன்டர்நேஷனல் பாலிடிக்ஸ் இந்த படத்தில் இருக்கிறது. அதேசமயம் ஜனரஞ்சகமான அனைவரும் ரசிக்கும்படியும், குடும்பங்கள், இளைஞர்கள், எல்லோருக்குமான ஒரு படமாக வந்திருக்கிறது.
என் சினிமா கேரியரில் ரொம்ப முக்கியமான படம். ஒரு லாரி ஓட்டுனரின் மன நிலையில் லாரி ஓட்டுனராக வடதமிழகத்து இளைஞனாக நடித்தது புதிய அனுபவம். அடுத்தடுத்து தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு படங்களிலும் பிற மாநிலங்களில் இருந்து வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு உகந்த கதைகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்கிறார் தினேஷ்.