மீண்டும் கைகோர்க்கும் லவ் ஆக்சன் டிராமா கூட்டணி | 5 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இந்தாண்டு வெளியாகும் ‛ஆடுஜீவிதம்' | பிரபல பின்னணி பாடகரின் தந்தை வீட்டில் 72 லட்சம் திருட்டு | மார்ச் 29ல் ‛பொன்னியின் செல்வன் 2' டிரைலர் ரிலீஸ் | 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சத்யராஜ் - ஷோபனா | கீர்த்தி சுரேஷின் பாட்டில் சேலஞ்சை நிறைவேற்றிய நானி - ராணா | நிதின் - ராஷ்மிகா படத்தை துவக்கி வைத்த சிரஞ்சீவி | அப்பா பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ் | ஐஸ்வர்யா ரஜினியிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டம் | செல்பி : போலீசாருக்காக காரை விட்டு இறங்கி வந்த ரஜினி |
தமிழ் சினிமாவில் சிறுவர்களை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து வெற்றி பெற்ற படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படி வெற்றி பெற்ற படங்களில் கடந்த பத்து வருடங்களாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள படம் 'பசங்க'. பாண்டிராஜ் இயக்கத்தில் கிஷோர், ஸ்ரீராம், விமல், வேகா, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் 2009ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி வெளிவந்தது.
அப்படத்தில் நடித்தற்காக கிஷோர், ஸ்ரீராம் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாகவும், பாண்டிராஜ் சிறந்த வசனத்திற்காகவும், சிறந்த பிராந்திய மொழித் திரைப்படம் ஆகிய தேசிய விருதுகளை இந்தப்படம் பெற்றது. இயக்குனரும், நடிகருமான சசிகுமார் இந்தப் படத்தைத் தயாரித்தார்.
10வது வருடத்தை நிறைவு செய்த 'பசங்க' பற்றி இயக்குனர் பாண்டிராஜ், “காலையில் எழுந்ததிலிருந்தே ஓர் இனம் புரியாத சந்தோஷம். பசங்க படம் ரிலீஸ் ஆன நாள். இன்றோடு 10 வருடம் ஆகிறது. முதலில் உதவி இயக்குனர் வாய்ப்பு தேடும் போது ஒரு படத்திலாவது உதவி இயக்குனராக டைட்டில் கார்டு வாங்கிவிட வேண்டும் என்ற ஆசை. உதவி இயக்குனராகி 7 படங்கள் வேலை பார்த்த பிறகு, ஒரு படத்திற்காவது இயக்குனர் ஆகிவிட வேண்டும் என்ற பேராசை. இறுதியில், அந்தக் கனவும் ச்சிகுமார் சார் மூலமாக நிறைவேறியது. ஆனால், உண்மையில் 'பசங்க' படம் பண்ணும் போது இது முதல் படமாகவும், கடைசிப் படமாகவும் கூட இருக்கலாம் என்றே நினைத்தேன். இதோ இன்று 10வது ஆண்டு. 10வது ஆண்டில் 9வது படத்துடன்... சேரன் சார், தங்கர்பச்சான் சார், சசிகுமார் சார், அசோக்குமார், கதிர், வாசு எனது அனைத்துத் தயாரிப்பாளர்கள், பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் நண்பர்களாகிய நீங்கள்...என அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார் பாண்டிராஜ்.