Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்திலிருந்து ஆரவ்வுக்கு இறங்கிய சரண்

02 மே, 2019 - 17:44 IST
எழுத்தின் அளவு:
Ajith-to-Aarav-:-Director-Saran

தமிழ் சினிமா உலகில் தற்போது தனிப்பெரும் நடிகராக உயர்ந்து நிற்பவர் அஜித். 1996ல் வெளிவந்த 'காதல் கோட்டை' படத்திற்கப் பிறகு 'நேசம், ராசி, உல்லாசம், பகைவன், ரெட்டை ஜடை வயசு' என தோல்விப் படங்களைக் கொடுத்த அஜித்திற்கு தான் இயக்கிய முதல் படமான 'காதல் மன்னன்' படம் மூலம் பிரேக் கொடுத்தவர் இயக்குனர் சரண்.

தொடர்ந்து காதல் நாயகனாக சாக்லேட் பாயாக மட்டுமே நடித்து வந்த அஜித்தை 'அமர்க்களம்' படம் மூலம் ஆக்ஷன் நாயகனாகவும் மாற்றியவர் சரண்தான். அதன் பின் இருவரும் இணைந்து 'அட்டகாசம், அசல்' ஆகிய படங்களிலும் இணைந்தார்கள். ஆனால், அந்தப் படங்கள் வெற்றி பெறவில்லை. 'அசல்' படத்தின் தோல்விக்குப் பிறகு ஏழு வருடங்கள் கழித்து சரண் இயக்கிய 'ஆயிரத்தில் இருவர்' படம் 2017ல் வெளிவந்தது. அந்தப் படம் வந்த சுவடு தெரியாமல் போனது.

இப்போது பிக் பாஸ் புகழ் ஆரவ் நடிக்கும் 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' என்ற படத்தை இயக்க ஆரம்பித்திருக்கிறார் சரண். அஜித், விக்ரம், கமல்ஹாசன், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களை இயக்கிய சரண் இப்போது ஒரு படத்தில் மட்டுமே நடித்து முடித்திருக்கும் ஆரவ் வரை இறங்கி வந்திருப்பது திரையுலகத்தில் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
லாரன்ஸின் அழைப்புக்காக காத்திருக்கிறேன் : ஸ்ரீரெட்டிலாரன்ஸின் அழைப்புக்காக ... பத்து ஆண்டை நிறைவு செய்த 'பசங்க' பத்து ஆண்டை நிறைவு செய்த 'பசங்க'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in