விக்ரம்' பட பிரமோஷனில் 'பஞ்சதந்திரம்' குழு | தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல் | சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார் | ஒருவேளை மங்காத்தா 2வாக இருக்குமோ - வைரலான புகைப்படம் | போதைப்பொருள் வழக்கு - ஷாருக்கான் மகன் ஆரியன் கான் அப்பாவியாம் | விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் | கன்னட படத்தில் நடித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | கேரள முதல்வரை சந்தித்த பாதிக்கப்பட்ட நடிகை | மலையாளத்தில் இன்று ஒரே நாளில் 2 போலீஸ் படங்கள் ரிலீஸ் | ஷங்கர் - ராம்சரண் படத்தின் டைட்டில் ‛அதிகாரி' |
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் நடிகர் நானி, சத்யராஜ், ஷரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் உருவான படம் ஜெர்சி. இந்தப் படம் ரிலீசாகி வெற்றிப்படமாக அறியப்பட்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு, எல்லா நிலைகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன.
ஆனால், எந்தப்படத்தையும் இதுவரை பாராட்டாத நடிகை அனுஷ்கா, இந்தப் படத்தை ஆஹோ... ஓஹோ என பாராட்டி இருக்கிறார். மொத்தப் படக் குழுவுமே, இதனால் சந்தோஷம் அடைந்திருக்கிறது.
உடல் எடை மெலிந்து, சைலன்ஸ் என்ற படத்தில் மாதவன் மற்றும் ஹாலிட் நடிகர்களோடு நடித்துக் கொண்டிருக்கும் அனுஷ்கா, ஜெர்சி படம் குறித்து, தன்னுடைய முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
ஜெர்சி படம் பிரமாதம்; ஒரு நடிகையின் எண்ண உணர்வுகளை, என்ன வார்த்தை கொண்டு பிரதிபலிப்பது என புரியாமல் தவிக்கிறேன். ஒரு ரசிகையாக இந்தப் படத்தை பாராட்டுகிறேன். ஒரு ரசிகையின் வார்த்தைகள்தான், படத்துக்கு கிடைக்கும் உண்மையான அன்பு. அது இந்தப் படத்துக்கு கிடைத்திருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் நானி, ஷரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள். படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இதுவே படத்துக்கு நல்ல விளம்பரம்தான்.