Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வித்தியாசமான போலீசாக அதர்வா - சாம் ஆண்டன்

01 மே, 2019 - 12:55 IST
எழுத்தின் அளவு:
Atharva-act-as-different-police-says-Sam-Anton

அதர்வா - ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள படம் 100. சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப்படம், மே 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். 100 படத்தை அடுத்து கூர்கா என்ற படத்தையும் அவர் இயக்கி வருகிறார்.

100 படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. அப்போது சாம் ஆண்டன் பேசுகையில், இரண்டு படங்களை காமெடி கதையில் இயக்கி விட்டு மூன்றாவதாக ஆக்சன் கதையுடன் அதர்வாவை சந்தித்தேன். அவரும், என்னை காமெடி படங்களை இயக்கியவர் என்கிற மனநிலையில் பார்க்காமல் அந்த கதையின் தன்மையை புரிந்து கொண்டு நடிக்க சம்மதித்தார்.

போலீஸ் கதைகளில் எத்தனையோ கதைகள் வந்திருந்தாலும் 100 படத்தில் அதர்வா நடித்துள்ள போலீஸ் வேடம், இன்றைய தருவாயில் மக்களுக்குத் தேவையான ஒரு கதாபாத்திரமாக இருக்கும். 100 என்கிற அவசர போன் எந்த அளவுக்கு துரிதமாக மக்களுக்கு பணியாற்றி வருகிறது என்பதை விறுவிறுப்புடன் படமாக்கியிருக்கிறேன். 100 அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும்.

அதேபோல் அதர்வாவும் பிட்டான உடல்கட்டுடன் கதாபாத்திரத்தை உணர்ந்து போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். அந்த வகையில், இந்த படம் அதர்வாவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் படமாக அமைந்துள்ளது என்றார் இயக்குனர் சாம் ஆண்டன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜோதிகாவிற்கு ஜாக்பாட்ஜோதிகாவிற்கு ஜாக்பாட் செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் சூர்யா? செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in