பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
இயக்குநர் முத்தையா இயக்கத்தில், கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இணைந்து நடித்துள்ள 'தேவராட்டம்'. இந்த படம் வரும் மே முதல் நாளில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பதற்காக, படக் குழுவினர், திருநெல்வேலியில் இருக்கும் ஒரு திரையரங்கத்திற்கு சென்றனர்.
அப்போது, கவுதம் கார்த்திக் கூறியதாவது: 'தேவராட்டம்' படம் முழுக்க முழுக்க கிராமிய பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் படம். கிராமத்துக் கதையை அப்படியே மண் மணம் மாறாமல் படமாக்கப்பட்டிருக்கிறது. படத்தின் எந்த இடத்திலும் ஆபாசமோ; விரசமோ இல்லாமல் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கக் கூடிய படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. வெகு நாட்களுக்குப் பின், ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தி, படம் பார்க்கும் அனைவருக்கும் ஏற்படும் என்பது உறுதி. அதனால், படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.