Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தர்பார்' படப்பிடிப்பில் புதிய கட்டுப்பாடு

29 ஏப், 2019 - 15:56 IST
எழுத்தின் அளவு:
New-restriction-in-Darbar-Shooting-spot

'தர்பார் லீக்ஸ்' என்று சொல்லுமளவிற்கு மும்பையில் நடைபெற்று வரும் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க ஏஆர். முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படப்பிடிப்பு புகைப்படங்கள் தினமும் வெளியாகி வந்தது.

படக்குழுவில் இருப்பவர்களே அதை வெளியிட்டார்களா அல்லது படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர்கள் வெளியிட்டார்களா என்று தெரியாமலே இருந்தது. ரகசியமாக காக்கப்பட வேண்டிய ரஜினிகாந்த் மற்றும் நயன்தாராவின் தோற்றம் என்னவென்று ரசிகர்களுக்குத் தெரிந்து போனது.

மீடியாக்களிலும் அந்தப் புகைப்படங்கள் வெளியாகி படப்பிடிப்பு தளத்தில் கட்டுப்பாடே இல்லையா என்று கேட்குமளவிற்கு கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள். விஜய், அஜித் ஆகியோர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் ஒரு படப்பிடிப்பு புகைப்படம் கூட 'லீக்' ஆகவில்லை. அப்படியிருக்கையில் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் இவ்வளவு எளிதாக நடக்கிறதே என்ற கேள்வியும் எழுந்தது. இதனால் கடுப்பான படக்குழுவினர் தற்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்களாம்.

அரங்கிற்குள் யாரும் மொபைல் போன்களை எடுத்து வரக் கூடாது என்றும், சுற்றிலும் யாராவது படப்பிடிப்பை புகைப்படம் எடுத்தால் அவர்களைத் தடுக்க வேண்டும் என்று புதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

இதையெல்லாம் தடுத்துவிடுவார்கள், ஆனால், படம் வெளியான பிறகு 'பைரசி' வருவதைத்தான் தடுக்க மாட்டார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'அவெஞ்சர்ஸ்' - அழுகையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரசிகை'அவெஞ்சர்ஸ்' - அழுகையால் ... பிரபுதேவா பாணியில் ராகவா லாரன்ஸ் பிரபுதேவா பாணியில் ராகவா லாரன்ஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

JMK - Madurai,இந்தியா
30 ஏப், 2019 - 11:31 Report Abuse
JMK வந்துட்டயான் யா வந்துட்டான் ?( எந்த தல தறுதலை ரசிகனா தெரியலையே ?
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
30 ஏப், 2019 - 10:53 Report Abuse
Raman Ganesan பாவம் பெங்களூரு மீனாட்சி சுந்தரமும் அழுகை ஆரம்பிச்சுட்டாரு இனி படம் வந்த பின்பும் நிறுத்த மாட்டாரு
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
30 ஏப், 2019 - 04:17 Report Abuse
meenakshisundaram ஆரம்பிச்சுட்டாங்கய்யா பட விளம்பரத்தை .ரஜினியும் தன போக்கிலே விளம்பரம் கொடுக்க ஆரம்பிச்சச்சு -சட்ட சபை தேர்தல்லே போட்டி என்று.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in