Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயவாடாவிலிருந்து விரட்டப்பட்ட ராம்கோபால் வர்மா

29 ஏப், 2019 - 11:06 IST
எழுத்தின் அளவு:
Ram-Gopal-Varma-out-from-Vijayawada

தெலுங்குத் திரையுலகத்தில் சர்ச்சைக்குரிய இயக்குனராக இருக்கும் ராம்கோபால் வர்மா எடுத்துள்ள 'லட்சுமியின் என்டிஆர்' படத்தை தடைக்குப் பிறகு ஆந்திராவில் வரும் மே 1ம் தேதி வெளியிட உள்ளார்கள். அதற்காக நேற்று விஜயவாடாவில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை அவர் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அதை நடத்த முடியாத அளவிற்கு ஆந்திரா போலீஸ் அவர் மீது நடவடிக்கை எடுத்தது.

நேற்று, விஜயவாடா சென்ற அவரை போலீஸ், கஸ்டடியில் வைத்தது. பின்னர் வலுக்கட்டாயமாக அவரை விஜயவாடாவை விட்டு ஐதராபாத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆந்திராவின் தற்போதைய முதல்வரான சந்திரபாபு நாயுடுவை 'லட்சுமியின் என்டிஆர்' படத்தில் ராம்கோபால் வர்மா வில்லனாக சித்தரித்திருக்கிறார். அதனால்தான் படத்திற்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு உள்ளது.

இதனிடையே, தன்னை அங்கிருந்து வெளியேற்றியதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. அவருக்கு ஆதரவாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'பாகுபலி 2', நினைவு கூறும் குழுவினர்'பாகுபலி 2', நினைவு கூறும் குழுவினர் 20 நாளில் படத்தை எடுத்து முடித்த காமெடி நடிகர் 20 நாளில் படத்தை எடுத்து முடித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
29 ஏப், 2019 - 13:02 Report Abuse
Sathyanarayanan Bhimarao இதையே பி.ஜெ.பி ஆட்சி புரியும் மாநிலத்தில் செயதிருந்தால் 'பேசசுரிமை போய் விட்டது, மத சார்பின்மை செத்து விட்டது' என்று அறிவு ஜீவிகள்() கொந்தளித்துப் போய் பக்கம் பக்கமாக அறிக்கை விட்டிருப்பார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in