Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பாகுபலி 2', நினைவு கூறும் குழுவினர்

29 ஏப், 2019 - 11:03 IST
எழுத்தின் அளவு:
Baahubali-2-teams-recall-the-past

இந்தியத் திரையுலகில் மிகப் பெரும் வசூல் சாதனையைப் படைத்த படம் 'பாகுபலி 2'. 2017ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி வெளியான இந்தப் படம், 1500 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்தது. நேற்றுடன் படம் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு படக்குழுவினர் படம் பற்றி அவர்களுடைய நினைவுகளைப் பதிவிட்டுள்ளனர்.

இயக்குனர் ராஜமவுலி, “பாகுபலி 2வின் இரண்டு ஆண்டுகள். எங்கள் இதயங்களில் எப்போதுமே வைத்திருக்கும் அளவிற்கு படத்தை பெரிய வெற்றி பெற வைத்த ரசிகர்களுக்கும் குழுவினருக்கும் நன்றி,” எனக் கூறியுள்ளார்.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் 'பாகுபலி 2' வெளிவந்தது. எப்போதும் இந்த நாள் எனக்கு எமோஷனலான ஒன்று. ராஜமவுலி மற்றும் மொத்த குழு மீதும் எப்போதும் நன்றியுடன் நினைப்பேன். என்னுடன் எப்போதும் இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி. ஆதரவளித்ததற்கும் பெரிய அளவில் வெற்றி பெற வைத்ததற்கும் நன்றி,” என பிரபாஸ் பதிவிட்டுள்ளார்.

“இந்திய சினிமாவையும், என் வாழ்க்கையையும் மாற்றிய நாளின் இரண்டாவது வருடம் இன்று,” என ராணா தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களாகியும் 'பாகுபலி 2' படத்தின் வசூல் சாதனையை இன்னும் வேறு எந்தப் படங்களும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பைக்கில் சென்று ஓட்டு போட்ட மாதவன்பைக்கில் சென்று ஓட்டு போட்ட மாதவன் விஜயவாடாவிலிருந்து விரட்டப்பட்ட ராம்கோபால் வர்மா விஜயவாடாவிலிருந்து விரட்டப்பட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in