Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜீவா, அருள்நிதிக்கு கபடி பயிற்சி

28 ஏப், 2019 - 20:45 IST
எழுத்தின் அளவு:
Arulnidhi---Jiiva-train-as-Kabadi-player

விமல், சூரி, அஞ்சலி நடித்த 'மாப்ள சிங்கம்' படத்தை இயக்கியவர் ராஜசேகர். அந்தப்படம் கமர்ஷியலாக தோல்வியடைந்ததால் அடுத்தப்பட வாய்ப்பு கிடைப்பதில் இயக்குநர் ராஜசேகருக்கு தாமதம் ஏற்பட்டது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அவருக்குப் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சொன்ன கதை பிடித்துப்போய், 'ஜித்தன்' ரமேஷ் படத்தை தயாரிக்க முன்வந்தார்.

'ஜித்தன்' ரமேஷ் தயாரிப்பில் ராஜசேகர். இயக்கும் புதிய படத்தில் ஜீவாவும், அருள் நிதியும் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப்படத்தில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி ஏற்று நடிக்கும் கேரக்டர்கள் குறித்து இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரண்டு நண்பர்கள் பற்றிய கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் ஜீவாவும், அருள்நிதியும் கபடி விளையாட்டு வீரர்களாக நடிக்கிறார்கள். இந்த படத்தை இயக்கும் ராஜசேகரின் நண்பர்களில் பலர் நிஜத்தில் கபடி விளையாட்டு வீரர்களாம். அந்த நண்பர்களைக் கொண்டே இப்படத்தில் கபடி வீரர்களாக நடிக்கும் ஜீவா, அருள்நிதி இருவருக்கும் கபடி விளையாட பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டீஸரை விரைவில் வெளியிட உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கதாநாயகி இல்லாமல் வெளிநாட்டில் பாடல்காட்சிகதாநாயகி இல்லாமல் வெளிநாட்டில் ... தர்பார் படப்பிடிப்பில் நடப்பது என்ன? தர்பார் படப்பிடிப்பில் நடப்பது என்ன?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in