வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் | தரக்குறைவாக விமர்சித்த நெட்டிசன்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி |
ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளியான படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்த படம் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. படத்திற்கு ஒரு தரப்பில் பாராட்டு கிடைத்தாலும், மற்றொருபுறம், ஆபாச நெடி அதிகமாக இருந்ததால் விமர்சனங்கள் எழுந்தன.
படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இந்த படம் ஹிந்தியில் ரீ-மேக்காக இருக்கிறது என்ற தகவல் இப்போது அடிபடத் தொடங்கியுள்ளது. ஹிந்தியிலும் தியாகராஜன் குமாரராஜாவே இயக்க, பிரபல பாலிவுட் பட நிறுவனம் ஒன்று இப்படத்தை தயாரிக்க இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை யாரும் வெளியிடவில்லை என்பது ஒருபக்கம் இருக்க, டிரேடிங் வட்டாரத்திலும் இந்த தகவலில் உண்மை இல்லை என்கின்றனர்.