Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வேள்பாரி' - திரைப்படமாக்க தனுஷ் ஆவல்

27 ஏப், 2019 - 17:57 IST
எழுத்தின் அளவு:
Dhanush-eager-to-Make-movie-about-Velpaari

சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், தற்போது மதுரை லோக்சபா தொகுதி வேட்பாளருமான எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய சரித்திரத் தொடர் 'வேள்பாரி'. வார இதழ் ஒன்றில் 100 வாரங்களுக்கும் மேலாக வெளிவந்த தொடர் இது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் 14 இன மக்களுக்குத் தலைவனாக வேளிர் குலத்தைச் சேர்ந்த பாரி ஆக இருக்கிறான். அந்த மலைப் பகுதியைக் கைப்பற்ற குலசேகரப் பாண்டியன், சேர, சோழ மன்னர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு போராடுகிறான்.

மூவேந்தர்களை எதிர்க்கும் பாரி, வெற்றி பெற்றானா இல்லையா என்பதுதான் இந்த சரித்திரத் தொடரின் கதை. இயற்கைக்கும், மனிதப் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதி வடிவம் தான் வேள்பாரியின் கதை.

வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த சரித்திரத் தொடரை திரைப்படமாக்க நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தனுஷ் ஆவலாக உள்ளாராம். அதற்கான பேச்சு வார்த்தைகளும் ஆரம்பமாகிவிட்டதாம்.

சு.வெங்கடேசன் எழுதிய சாகித்ய அகாடமி விருது பெற்ற 'காவல் கோட்டம்' நாவலை அடிப்படையாக வைத்துதான் 'அரவான்' படம் உருவாக்கப்பட்டது.

மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்க முயற்சித்து வரும் நிலையில் 'வேள்பாரி' கதையும் படமானால் அது தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த சரித்திரப் படமாக அமையும்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ரீதன்யா சுரேஷுக்கு கமல் பாராட்டுஸ்ரீதன்யா சுரேஷுக்கு கமல் பாராட்டு மாமனிதன் படத்தில் இயக்குநர் மகன் மாமனிதன் படத்தில் இயக்குநர் மகன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

தமிழ் குடி மகன் சித்திரத்தில் இருக்கும் முகம் அஜித்தை போன்று உள்ளது ..
Rate this:
krishna - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28 ஏப், 2019 - 11:02 Report Abuse
krishna பண்ணுங்க தனுஷ் தமிழ் சமூகத்துக்கு நீங்கள் செய்யும் செயல் ஒரு வரலாறு.. ராஜமௌலி சரித்திர படமாக எடுக்கிறார். நாமும் நமது பங்கிற்கு நிறைய சரித்திரத்தை சார்ந்த படமாக எடுத்து நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும். தமிழ் மண்ணின் சரித்திரம் உலகறியும் இதை உங்களை போன்றோர் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். வெற்றி அல்லது அமீர் சகோதரர் மட்டும் தான் இதை கதை திரைக்கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடியும். இரண்டு மூன்று வருடங்கள் ஆனாலும் கவலை வேண்டாம், உலகமே இந்த படத்தை கொண்டாடும் உங்களின் திரை உலக வரலாற்றில் இந்த படம் மைல்கல்லாக இருக்கும். முடிந்தால் நம் மக்கள் செல்வனையும் ஒரு கதாபாத்திரத்தில் இணைத்து கொள்ளவும். வெற்றிமாறன் சசி சமுத்திரக்கனி அமீர் வசந்தபாலன் அனைவரும் ஒன்றிணையுங்கள்.வேல்பாரி நிச்சயம் சரித்திர சாதனை படைப்பான். பொன்னியின் செல்வனும் வர வேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in