Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வரலட்சுமியின் அடுத்த ஜென்ம ஆசை

27 ஏப், 2019 - 12:56 IST
எழுத்தின் அளவு:
Varalaxmis-desire

அடுத்த ஜென்மத்தில் தான் என்னவாக இருக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆவலை நடிகை வரலட்சுமி தெரிவித்திருக்கிறார். கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என்ற கொள்கையெல்லாம் இல்லாமல், தனக்கு என்ன கதாபாத்திரம் கொடுக்கின்றனரோ, அந்த கதாபாத்திரம் படத்தில் முக்கியத்துவத்துடன் இருந்தால், அதை ஏற்றுக் கொண்டு நடிப்பதில் மும்முரமாக இருக்கிறார் வரலட்சுமி.

கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான சர்க்கார், மாரி 2 போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதையடுத்து, தற்போது ஜே.கே., இயக்கத்தில் உருவாகி வரும் 'ராஜ பார்வை' திரைப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து வருகிறார். இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து, வரலட்சுமி கூறியிருப்பதாவது: அடுத்த ஜென்மம் ஒன்று இருக்குமானால், ஒரு காவல் துறை அதிகாரியாகவே இருக்க விரும்புகிறேன். ராஜ பார்வை படத்தில், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி வேடம் ஏற்றிருக்கிறேன். அந்த வேடத்துக்கு தகுந்தபடி நடித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடம் அளிக்கும் இயக்குநர்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
புதுப்பேட்டையில் சோனியாவை கவர்ந்த குளியலறை காட்சிபுதுப்பேட்டையில் சோனியாவை கவர்ந்த ... ராணா அர்ப்பணிப்பு : சிலிர்த்த சாய் பல்லவி ராணா அர்ப்பணிப்பு : சிலிர்த்த சாய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

MATHIYALAGAN - Chennimalai,இந்தியா
27 ஏப், 2019 - 14:00 Report Abuse
MATHIYALAGAN police aaga nadippathu sulabam, vaalvathu kadinam...............
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in