Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர்கள் அமைதி காக்க ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

27 ஏப், 2019 - 12:09 IST
எழுத்தின் அளவு:
Raghava-lawrence-asks-his-fans-to-keep-calm

ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் போராட்டக்காரர்களுக்கு உதவி செய்தார். இதனை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்து பேசினார். அன்று முதல் சீமான் கட்சியினரின் ஒரு சிலர், ராகவா லாரன்ஸ் பற்றி தரக்குறைவாக சித்தரித்து இணையதளங்களில் கருத்து பதிவிடுவதும், அவரது நிகழ்ச்சிகளுக்கு இடையூறு செய்வதுமாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து சமீபத்தில் ராகவா லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் "சண்டையா? சமாதானமா எதற்கும் தயார்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த விஷயத்தில் சீமான் வருத்தம் தெரிவித்தாலும், அவரது ஆதரவாளரான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ராகவா லாரன்சை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்.

இதனால் லாரன்ஸ் ரசிகர்கள் சிலர், சுரேஷ் காமாட்சி வீடு, அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். சுரேஷ் காமாட்சி மீது திருநங்கைகள் போலீசில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் தன் ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள். என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள். என் மீது அக்கறை உள்ள ஒரு சில மாற்றுத்திறனாளிகளும், திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப்பட்டேன். அப்படி எதுவும் செய்யாதீர்கள். பொறுமையை கடைபிடியுங்கள்.

நாம் நமது வழியில் நல்லதை மட்டும் நினைப்போம், நல்லதையே செய்வோம். அவர்கள், அவர்கள் வழியில் போகட்டும். எனக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மும்பையில் காஞ்சனா, ஹிந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம். அது வரை அமைதி காப்போம்.

கடவுள் நமக்கான நல்லதை செய்வார். நமக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கும் நாம் நல்லது நடக்க ஆண்டவனை பிரார்த்திப்போம். நம்மை பற்றி புரிந்து கொள்ள ஆண்டவன் அருள் அவர்களுக்கு கிடைக்கட்டும்.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
காதல் பிரிவை முன்பே சொன்ன ஸ்ருதிஹாசன்காதல் பிரிவை முன்பே சொன்ன ... புதுப்பேட்டையில் சோனியாவை கவர்ந்த குளியலறை காட்சி புதுப்பேட்டையில் சோனியாவை கவர்ந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
02 மே, 2019 - 03:15 Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) சீமான் இதுவரை வாயால் பேசுயுள்ளாரே தவிர, இதுவரை செயலில் எந்த நன்மையும் செய்ததில்லை. போராட்டம் செய்வதெல்லாம் ஒரு வேலை என்று சொல்லிவிடாதீர்கள். தம்பிகள் கொடுக்கும் பணத்தை வைத்து, அவரது மனைவி பிரசவத்திற்கு, தெலுங்கு ரெட்டிக்கு சொந்தமான அப்பல்லோவில் சேர்த்து தங்கவைத்து ஒருகோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளார் ஆனால் தம்பிகள் மட்டும் அப்பத்தாளை வைத்து வீட்டில் பிரசவம் பார்க்கவேண்டும் என்று கூறியவர். அவரது வேட்பாளர்கள் 12 பேர் கோடீஸ்வரர்கள். போஸ்டர் ஒட்டும் தம்பிகள் கேள்வி கேட்கக்கூடாது என்று சமீபத்தில் தான் திட்டினார்..
Rate this:
hariharan - chennai,இந்தியா
27 ஏப், 2019 - 13:13 Report Abuse
hariharan ஐயோ இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா
Rate this:
vadivel - bhavani,இந்தியா
27 ஏப், 2019 - 12:51 Report Abuse
vadivel எதிர்பார்த்த வசூல் கிடைக்கல போல
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in