திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
ஆக்ஷன் ஹீரோவாக அறியப்படும் அருண் விஜய்க்கு கடந்தாண்டு மணிரத்னம் படமான செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தப் பின், அதிர்ஷ்டம் கதவைத் தட்டிக் கொண்டே இருக்கிறது. அவர் நடித்து சமீபத்தில் வெளியான தடம் படம், வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஐம்பது நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடப் படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், அடுத்ததாக, க்ரைம் த்ரில்லர் படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். துருவங்கள் பதினாரு படப் புகழ் கார்த்திக் நரேனுடன், புதிய படத்துக்காக கைகோர்த்திருக்கிறார் அருண் விஜய். இந்தப்படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
விரைவில் இந்தப் படம் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிட இருக்கிறது, படத்தை தயாரிக்கப் போகும் லைகா நிறுவனம்.