Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாந்தனு கனவை நிறைவேற்றுவாரா விக்ரம் சுகுமாறன்?

26 ஏப், 2019 - 11:34 IST
எழுத்தின் அளவு:
Vikram-sukumaran-to-direct-Santhanu

மதயானைக்கூட்டம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் விக்ரம் சுகுமாறன். இந்தப் படத்தின் மூலம்தான் கதிர் ஹீரோவாக அறிமுகம் ஆனார். வேல ராமமூர்த்தி வில்லனாக அறிமுகம் ஆனார். ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பாளராக அறிமுகமானார். விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற இந்தப் படம் வசூலில் வெற்றி பெறவில்லை.

இதனால் இயக்குனர் விக்ரம் சுகுமாறனுக்கு அடுத்த படம் கிடைப்பதில் காலதாமதம் ஆனது. தற்போது சாந்தனு ஹீரோவாக நடிக்க ஒரு படம் இயக்க இருக்கிறார். சாந்தனு தவிர மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் முறைப்படியான அறிவிப்பு வர இருக்கிறது.

பலமான சினிமா பின்னணி இருந்தும் சாந்தனுக்கு ஒரு வெற்றி சாத்தியப்படவே இல்லை. இத்தனைக்கும் அவர் திறமையான நடிகர்தான். சக்கரகட்டி படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தாலும் சித்து பிளஸ் 2, ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம் படங்கள் அவரை தூக்கி நிறுத்த தவறி விட்டன. வெற்றியை தவறவிட்ட விக்ரம் சுகுமாறன், சாந்தனுவின் வெற்றி கனவை நிறைவேற்றுவாரா என்பதை காதல்தான் தீர்மானிக்கும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தெருக்கூத்து நடத்தும் சினிமா இயக்குனர்தெருக்கூத்து நடத்தும் சினிமா ... தாதாவாகிறார் ஸ்ருதிஹாசன் தாதாவாகிறார் ஸ்ருதிஹாசன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
26 ஏப், 2019 - 14:02 Report Abuse
Mirthika Sathiamoorthi வளரும் நடிகருக்கு வெற்றி அவசியம் கமெர்ஷியல் ஹீரோ என பொதுவாக இல்லாமல் அதையும் தாண்டி சினிமாவில் அவர் யாரை மகிழ்விக்கப்போகிறார் என்னும் தெளிவு, தான் எந்த மாதிரியான brand? தன்னை விற்கும் தயாரிப்பாளருக்கு தான் யார்? காமெடி ஹீரோவா, ஆக்ஷன் ஹீரோவா, பெண்களை மயக்கும் சாக்லேட் பாய், குணச்சித்திர நடிகரா? பன்முகம் காட்டும் பன்முக நடிகர்? தன்னை முதலில் அடையாளப்படுத்தவேண்டும்...இவர் படத்துக்கு போகலாம் என மக்கள் நினைக்க வேண்டும்..பலவீனம் எளிதில் கண்ணுக்கு தெரியும், பலம் நம் கண்ணுக்கு தெரியாது...இன்று பலபேர் தோத்துபோவதற்கு இதுதான் காரணம்..இதுனுடன் அவரின் கதை தேர்வும் ஒரு காரணம்.. சுப்ரமணியபுரம், களவாணி முதில் இவர்தான் நடிக்க வேண்டியது...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in