சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி |
சில வாரங்களுக்கு முன் ரிலீசான படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, திருநங்கையாக நடித்திருந்தார். இந்தப்படத்திற்கு ஆதரித்தும், எதிர்த்தும் கலவையான விமர்சனங்கள் வந்தன. விஜய் சேதுபதியுடன், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, பகத் பாசில், பகவதி பெருமாள் மற்றும் காயத்ரி ஆகியோர் நடித்திருந்தனர். படம் சிறப்பாக வந்திருப்பதைத் தொடர்ந்து, படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா என்பவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்தப் படத்தைப் பார்த்த ஹிந்தி பிரபலங்களான அனுராக் காஷ்யப் மற்றும் விக்ரமாதித்ய மொத்வானி ஆகியோருடன் பலரும் படம் குறித்து பெருமையாக பேசத் துவங்கி உள்ளனர். படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவை வெகுவாக பாராடி இருக்கும் அவர்கள், படத்தை ஹிந்தியில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டால், மிகப் பெரிய வெற்றியடையும் என கூறியுள்ளனர்.
இதையடுத்து, படத்தை ஹிந்தியில் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் குமாரராஜா. இதற்காக பிரபலமான ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் குமாரராஜா பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஹிந்தி படத்தில், தமிழில் நடித்தவர்களில் பெரும்பாலானோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என்றும் இயக்குநர் தரப்பு கூறுவதால், சூப்பர் டீலக்ஸ் தமிழ் படத்தில் நடித்தவர்கள் சந்தோஷமாக உள்ளனர்.