50வது படத்தின் படப்பிடிப்பு : அஞ்சலி மகிழ்ச்சி | தரத்திற்காக தள்ளிப் போன 'அயலான்' | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு ரத்து : காரணம் என்ன? | 'கமெண்ட்' ஆப் செய்து ஏஆர் ரஹ்மான் டுவீட் | ஹிந்தி நடிகை பரிணீதி சோப்ரா திருமணம் | 'சந்திரமுகி 3' நடந்தால் ரஜினிகாந்த் நடிப்பாரா ? | விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' |
வங்கத்து பொண்ணு உபாசனா. மாடலிங் உலகில் பிசியாக இருந்தவர் 80க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். தமிழில் 88 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு டிராபிக் ராமசாமி படத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே கைவிட்ட நிலையில் சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது, "என்னை சுடும் பனி" என்ற படத்தில் நடிக்கிறார்.
இதில் இன்னொரு நாயகியாக சுமா பூஜாரி நடிக்கிறார். டீக்கடை பென்ஞ் படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த வெற்றி ஹீரோவாகிறார். கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவர்கள் தவிர சிங்கம்புலி, மனோபாலா, தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கிறார்கள். வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார், அருள்தேவ் இசை அமைக்கிறார். ராம்ஷேவா இயக்குகிறார், படம் பற்றி அவர் கூறியதாவது:
சின்ன வயதிலிருந்தே ஒன்றாக படித்து பழகியவர்கள், வெற்றியும் - உபாசனாவும். உபாசனா தானே முயற்சி செய்து உழைத்து தன் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்கிறார். வெற்றி சாதாரண நிலையில் இருந்தாலும் இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது. அவர்களுக்கு நடுவே வில்லனாக ஒருவன். அதற்கு பிறகு நடக்கும் சம்ப்வங்கள் என்ன என்பது திரைக்கதை சுவாரஸ்யம். இந்த திரைக்கதையில் நடந்த ஒரு கிரைம் சம்பவத்தை பாக்யராஜ் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதும் படத்தின் சுவாரஸ்யம். படப்பிடிப்பு சென்னை, கேரளா, பொள்ளாச்சி, நெல்லியம்பதி மற்றும் அம்பாசமுத்திரம் போன்ற இடங்களில் நடக்க உள்ளது. என்றார் .