'விக்ரம் 3'க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர்: கமல் | பியூட்டி கம்மிங் ஒத்து : ரம்யா கவுடாக்கு ஆர்மி ரெடி | தேவதை போல் ஜொலிக்கும் ஸ்ருதிராஜ் | விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட உத்தரவு | ‛வீரன்'-ஆக களமிறங்கிய ஆதி | தனுஷ் பிறந்தநாளில் திரைக்கு வரும் திருச்சிற்றம்பலம் | 12 நாட்களில் 100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் டான் | விஜய்யின் 68வது படத்தை இயக்கும் அட்லி | கஞ்சா பூ கண்ணாலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு | ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‛1947 ஆகஸ்ட் 16' |
ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த சம்பத் ராம், தொடர்ந்து பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். காஞ்சனா 3 படத்தில் அவர் நடித்திருக்கும் அகோரி கதாபாத்திரம், அவரையே மறைத்துவிட்டு புதிய சம்பத்ராமை பார்க்க வைக்கிறது.
காஞ்சனா முதல் பாகத்தில் வில்லனாக நடித்த சம்பத்ராம், காஞ்சனா 3யில் அகோரியாக வித்தியாசமான வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். கூன் வளைந்த முதுகோடு, படம் முழுவதும் குணிந்தபடியே நடித்திருக்கும் சம்பத்ராமின் நடிப்பும், அவரது அகோரி வேடமும் படத்தில் முக்கிய பங்குபெறுவதோடு, படத்தின் திருப்புமுனையாக அமைந்திருப்பதால், அவரது வேடத்திற்கும், அதில் அவர் நடித்த விதத்திற்கும் பாராட்டு குவிந்து வருகிறது.
இந்த கேரக்டரில் முதலில் பாலிவுட் வில்லன் நடிகர் ஒருவர் நடிப்பதாக இருந்தது. அந்த நடிகர் இன்னொரு படத்தில் இதே அகோரி வேடத்தில் நடிப்பதால் அவர் இதில் நடிக்க முடியாமல் போக, சம்பத்ராமுக்கு அகோரி வேடம் போட்டு மேக்கப் டெஸ்ட் எடுத்திருக்கிறார்கள். அப்போது அவரை பார்த்த ராகவா லாரன்ஸ், ”இவரே சரியா இருக்கிறாரே, இவரை நடிக்க வச்சிரலாம்”, என்று கூறி சம்பத் ராமை நடிக்க வைத்திருக்கிறார்.
சம்பத்ராம் தற்போது, பிரபு சாலமன் இயக்கத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருவதோடு சத்யசிவா இயக்கத்தில் உருவாகும் புது படம் ஒன்றிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சத்யசிவா இயக்கி வெளியீட்டுக்கு தயராக உள்ள '1945' படத்திலும் சம்பத்ராம் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். விஜய் ஆண்டயின் 'கொலைகாரன்' படத்திலும் நடித்திருக்கிறார்.