இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி | போதைக்கு எதிராக போராடும் சாலா | உறுப்பினர்கள் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை | ரஜினி 170 : புது ஹேர்ஸ்டைலில் ரஜினிகாந்த்… | ஸ்ரீதேவி மறைவுக்கு என்ன காரணம்? - போனி கபூர் விளக்கம் |
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, "ஒரு வடக்கன் செல்பி" படத்தின் மூலம் ஹீரோயின் ஆனவர் மஞ்சிமா மோகன். "அச்சம் என்பது மடமையடா" படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு "சத்ரியன், இப்படை வெல்லும்" படங்களில் நடித்தார். தற்போது "தேவராட்டம்" படத்தில் நடித்துள்ளார். "ஜெயலலிதா வேடத்தில் நடிக்க பொருத்தமானவள் நான்தான்" என்கிறார் மஞ்சுமா. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
எல்லா நடிகைகளுக்குமே அஜீத், விஜய்யுடன் நடிக்க ஆசை இருப்பது போன்று, ஜெயலலிதா பயோபிக்கில் நடிக்கவும் ஆசை இருக்கும். இப்போது பலர் நடித்துக் கொண்டிருந்தாலும், ஜெயலலிதா வேடத்திற்கு பொருத்தமானவள் நான் தான். இதை நான் சொல்லவில்லை. இயக்குனர் கவுதம் மேனன் தான் சொன்னார்.
அவர் தற்போது இயக்கி வரும் வெப் சீரிசில் ஜெயலலிதாவாக நடிக்க என்னைத்தான் முதலில் அழைத்தார். அப்போது நான் 3 படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் அவர்கள் கேட்ட தேதியை என்னால் கொடுக்க முடியவில்லை. 3 மாதம் கால்ஷீட் கேட்டார் அதையும் ஒதுக்க முடியவில்லை. அதனால் நடிக்க முடியாமல் போனது. ஜெயலலிதாவின் முகச் சாயல் எனக்கு இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் நானும் ஜெயலலிதா பயோபிக்கில் நடிப்பேன் என்கிறார் மஞ்சுமா மோகன்.