Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சஹானா படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்

25 ஏப், 2019 - 10:49 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-helps-Tanjore-student

சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தஞ்சை மாவட்டம் பூக்கொல்லையை சேர்ந்த சஹானா என்ற மாணவி 600க்கு 524 மதிப்பெண்கள் பெற்றார். சஹானா சமீபத்தில் வீசிய கஜா புயலில் வீட்டை இழந்தவர். படிக்க வீடு இல்லாமல் படித்த பள்ளியிலேயே உறங்கி, மின்சாரம் இல்லாததால் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படித்து இவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளார். மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால் விவசாய கூலி வேலைக்கு செல்ல முடிவு செய்திருந்தார்.

இதுகுறித்து சஹானா படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வம் தனது டுவிட்டரில், "கஜா புயலால் இடிந்த வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையிலும் உறுதியோடு படித்து பிளஸ் 2வில் 524 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் சஹானா. சஹானா ஊக்கமது கைவிடேல்" என்று கூறியிருந்தார். இது வைரலாக பரவி பலரும் சஹானாவின் படிப்புக்கு உதவ முன்வந்தனர்.

இந்தப் பதிவைப் பார்த்த மூடர் கூடம் பட இயக்குநர் நவீன், “வாழ்த்துகள் சஹானா. இந்த 524 மதிப்பெண், நகரங்களில் பெரும்பள்ளிகளில் பெருந்தொகை கட்டி, ஸ்பெஷல் டியூஷன்கள் வைத்து, இரவு அம்மாவின் காம்ப்லான் குடித்து படித்து பரிட்சை எழுதி எடுத்த பல 590களை விடவும் மேலானதே” என்று கூறினார்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இதுபற்றி கேள்விப்பட்டு, சஹானா எந்த படிப்பு படித்தாலும் அதன் முழு செலவையும் ஏற்பதாக அறிவித்துள்ளார். இதனை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
தங்கம் வென்ற கோமதிக்கு ஒரு லட்சம் : ரோபோ சங்கர்தங்கம் வென்ற கோமதிக்கு ஒரு லட்சம் : ... ஜெயலலிதா வேடத்திற்கு பொருத்தமானவள் நான் தான்: மஞ்சிமா மோகன் ஜெயலலிதா வேடத்திற்கு பொருத்தமானவள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

M.SHANMUGA SUNDARAM - TUTICORIN,இந்தியா
01 மே, 2019 - 14:53 Report Abuse
M.SHANMUGA SUNDARAM பணம் மூட்டை கட்டி வைப்பதற்கு அல்ல. தேவை படுவோர்க்கு தேவை அறிந்து செலவு செய்வதற்குத்தான். எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான். அதற்கு ஊக்கம் அளிப்பவன் இறைவனின் அவதாரம் என்றே சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள் சிவா கார்த்திகேயன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Ramesh M - COIMBATORE,இந்தியா
29 ஏப், 2019 - 23:15 Report Abuse
Ramesh M விடுங்க மிர்திகா சத்தியமூர்த்தி. இந்த மாதிரி (வால்டர்) மாதிரியான நபர்களுக்கு விளக்கமெல்லாம் கொடுப்பது வேஸ்ட். அவர்கள் காதில் மணி கட்டியவர்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை மட்டும் செய்வார்கள். இவர்கள் நோக்கம் வேறு
Rate this:
vadivel - bhavani,இந்தியா
27 ஏப், 2019 - 13:02 Report Abuse
vadivel அருமை... இந்த மாதிரி செய்யும் சில நல்ல விஷயங்களை தெரிவியுங்கள்.. மனம் இல்லாமல் செய்யாவிடினும் விளம்பரத்திற்காகவும், போட்டிக்காகவும் சில பேர் நல்லது செய்தால்கூட கஷ்டப்படுவர்களுக்கு நல்லது நடக்க வாய்ப்பு உள்ளது...
Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
25 ஏப், 2019 - 14:57 Report Abuse
Vijay D Ratnam வெல்டன் சிவகார்த்திகேயன் அவர்களே. தொடர்ந்து சத்தமே இல்லாமல் இது போன்ற பல உதவிகளை செய்துவரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
வால்டர் - Chennai,இந்தியா
25 ஏப், 2019 - 12:30 Report Abuse
வால்டர் அருமை சிவா. இதுதான் ஆன்மீகம். சூப்பர் ஸ்டார் என்ன செய்கிறாரோ? சினிமா டயலாக் மேடையையும் பேசியே சாகடிக்கிறாப்ல. சொந்த ஸ்கூல்ல கூட அநியாய பீஸ்.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
26 ஏப், 2019 - 10:41Report Abuse
Mirthika Sathiamoorthiஅது என்னங்க சூப்பர்ஸ்டார்...கஜ புயல் நிவாரணம் ரஜினி சார்பா மன்றத்தின் மூலம் எவ்வளவு கெடைச்சதுன்னு சென்னைக்கு பக்கம் தானே தஞ்சாவூர் என்னைக்காவது போய் விசிரிச்சுருக்கீங்களா? அதை விடுங்க இதுக்கு முன்னாடி ஒரு இஸ்லாம் மாணவனை வீட்டுக்கு வரவச்சு கல்வி செலவை முழுவதும் ஏற்றாரே அப்போ நீங்க ஏன் கம்ன்னு இருந்தீங்க? ஒஹ்ஹஹ் திட்ட மட்டும்தான் வாய்த்தேறப்பீங்களோ? ஒரு சந்தேகம், ரஜினி கட்சி ஆரம்பிக்கல பதவியிலும் இல்லா...அவரு அநியாய பீஸ் வாங்குறத கவலைப்படும் நீங்க, எத்தனையோ மினிஸ்டர் MLA பதிவியில் இல்லாத அரசியல்வாதிங்க நடத்துற ஸ்கூல், காலேஜ் இங்க வாங்குற பீஸை பத்தி இந்தமாதிரி மேடையிலும் பேசியே சாகடித்து அநியாய பீஸ் வாங்குறதை கேட்ருக்கீங்கால? ஏன்? இல்ல நீங்க என்ன திமுகவா, அதிமுகவா, இல்ல விஜய் அஜித் விசிறியா? ரஜினியமட்டும் டார்கெட் பண்றீங்களே? சிவகார்த்திகேயனை பாராட்டணும்ன்னா பாரட்டுங்க ஒரு படி மேல போய் உங்க கைக்காசை (அஞ்சு பைசா கொடுக்க மாடீங்க ஆனா ஊருல இருக்கறவனையெல்லாம் ஏன் கொடுக்கலைன்னு கேப்பீங்க அது வேற விஷயம் ) சிவாவுக்கு அனுபிச்சும் வைங்க யார் தடுத்தா? யாருகிட்ட கேள்வி கேக்கணுமோ எங்க மாற்றம் வரணுமா அங்க கேளுங்க அதுதான் புரட்சி அதுதான் இப்போ தேவை......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in