நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில், கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி மற்றும் பலர் நடித்துள்ள படம் தேவராட்டம். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று(ஏப்., 24) காலை சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய படக்குழுவினர் பலரும் படத்தின் தலைப்பைப் பார்த்து இது ஒரு சாதிப் படம் என்று விமர்சித்து வருகிறார்கள். தேவராட்டம் என்பது நாட்டுப்புறக் கலைகளில் ஒரு கலை. அதை வைத்துதான் இயக்குனர் இந்தப் படத்திற்குத் தலைப்பை வைத்தார் என்று பேசினார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் முத்தையா, திரும்பத் திரும்ப, இது சாதிப் படமல்ல, பாசமான அக்காவுக்கும், ஒரு தம்பிக்கும் இடையில் நடக்கும் கதை. ஆறு அக்காக்கள், ஒரு தம்பி, தம்பிக்கு ஒரு பிரச்சினை வரும் போது அதை அக்காக்கள் எப்படி சிக்கலில்லாமல் தம்பியை அதிலிருந்து விலக்கிக் கொண்டு வருகிறார்கள் என உறவுகளின் வலிமையை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன் என்றார்.
அனைவரும் பேசி முடித்த பிறகு கடைசியாக மீண்டும் பேசிய படத்தின் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, “இயக்குனர் திரும்பத் திரும்ப பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். இது சாதியைப் பற்றியப் படம்தான். அவருக்குத் தெரிந்த அவர் வளர்ந்த ஊரில் அவர் பார்த்த, அனுபவித்த விஷயங்களைத்தான் அவருடைய படத்தில் வைக்கிறார். இந்தப் படத்தில் உறவுகளின் உன்னதத்தை மீண்டும் பேசியிருக்கிறார். மற்றவர்கள் பேசிய படி இது சாதிப்படம் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். இது ஒரு சாதிப் படம்தான் என்பதை மீண்டும் சொல்கிறேன்,” எனப் பேசி முடித்தார்.
'தேவராட்டம்' என்ற பெயரிலேயே இது சாதிப்படம்தான் என்று தெரிகிறது. அப்படியிருக்க இந்தப் படத்தை சாதிப் படமில்லை என இயக்குனர் மறுத்துப் பேசியதுதான் ஆச்சரியமாக உள்ளது.