Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் பலமே, என் மகள் தான் : தாடி பாலாஜி நெகிழ்ச்சி

24 ஏப், 2019 - 13:23 IST
எழுத்தின் அளவு:
My-strength-in-my-daughter-says-Thadi-Balaji

என் மகள், என்னுடன், வாரம் ஒரு மணி நேரம் இருக்க, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. என் பலமே என் மகள் தான் என, நடிகர் தாடி பாலாஜி நெகிழ்ச்சி உடன் கூறினார். தமிழ் சினிமாவில் காமெடியனாகவும், சின்னத்திரையில் காமெடி ஷோ நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருபவர் நடிகர் தாடி பாலாஜி. இவருக்கும், இவரது மனைவி நித்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து வாழ்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்ற நிலையில் அங்கு இருவருக்கும் சுமூகம் ஏற்பட்டு மீண்டும் இவர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சண்டை பெரிதாகி கொண்டே போனது.

இவர்களுக்கு, போஷிகா என்ற, மகள் உள்ளார். இருவரும், ஒருவர் மீது ஒருவர் புகார் செய்துள்ளனர். இதுதொடர்பாக, போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், மகளை பார்க்க அனுமதிக்க வேண்டும் என, நீதிமன்றத்தில், பாலாஜி வழக்கு தொடுத்திருந்தார். விசாரணையில், வாரம் ஒரு முறை, பாலாஜி அவரது மகளை பார்க்க, அனுமதிக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பாலாஜி கூறியதாவது: என் மகளின் படிப்பு செலவை, நானே பார்த்துக் கொள்கிறேன். என் பலமே, என் மகள் தான். அவரை வைத்து, என்னை வீழ்த்த, நித்யா நினைக்கிறார். நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், எனக்கு நியாயம் கிடைத்துள்ளது. வாரம் ஒரு முறை, என் தாய் வீட்டில், மாலை, 3:00 முதல், 4:00 மணி வரை, என் மகளை பார்க்க, நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இதற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கிலும் பிசியாகிறார் அனிருத்தெலுங்கிலும் பிசியாகிறார் அனிருத் விஜய்க்கு வில்லனாக ஷாரூக்கான் : விஜய் 63 அப்டேட் விஜய்க்கு வில்லனாக ஷாரூக்கான் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

24 ஏப், 2019 - 17:51 Report Abuse
கிழவன்
Rate this:
VASEEGARAN - BANGALORE,இந்தியா
24 ஏப், 2019 - 14:52 Report Abuse
VASEEGARAN இவன் தொல்லை தாங்க முடில. அந்த குட்டிச்சாத்தான் இவனை ஒரு ஆளாக கூட மதிப்பது இல்லை. இவன் என்னடான்னா போஷிகா போஷிகான்னு நடிக்கறான். மாசத்துக்கு ஒருவாட்டி பேப்பர்ல வந்து உயிரை வாங்கறானுங்க இவனும் இவன் பொண்டாட்டியும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in