Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரியா ஆனந்த்தின் ராசி குறித்து பேசி மன்னிப்பு கேட்ட ரசிகர்

23 ஏப், 2019 - 19:10 IST
எழுத்தின் அளவு:
Fans-apology-to-Priya-Anand

நடிகை பிரியா ஆனந்த் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு சில படங்களில் முக்கியமான வேடங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழில் இவர் நடித்த எல்கேஜி படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்தநிலையில் பிரியா ஆனந்தின் ராசி குறித்து மோசமாக விமர்சித்த ரசிகர் ஒருவர் பிரியா ஆனந்திடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

அதாவது, “பிரியா ஆனந்த் இங்கிலீஷ் விங்கிலிஷ் படத்தில் நடிகை ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்தார்.. தற்போது ஸ்ரீதேவி உயிருடன் இல்லை.. அதேபோல எல்கேஜி படத்தில் ஜேகே ரித்தீஷ் உடன் இணைந்து நடித்தார்.. சமீபத்தில் ஜேகே ரித்தீஷ் காலமானார்” எனக்கூறிய அந்த ரசிகர் பிரியா ஆனந்துடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு அவர் ஒரு கெட்ட சகுனமா என கமெண்ட் அடித்திருந்தார்.

அந்த ரசிகருக்கு பதிலளித்த பிரியா ஆனந்த், “பொதுவாக நான் இதுபோன்ற நபர்களுக்கு பதில் அளிப்பது இல்லை.. ஆனால் நீங்கள் கூறிய கருத்து ஒருவரின் மனதை எந்த அளவுக்கு புண்படுத்தும் என நீங்கள் உணர வேண்டும்.. பதிலுக்கு உங்களை திட்டுவது அவமானப்படுத்துவதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை” என கூறியுள்ளார்

இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர், “என்னுடைய தவறை நான் உணர்ந்து கொண்டேன்.. தயவுசெய்து என்னை மன்னிக்கவும்.. இன்று நீங்கள் நடித்த எல்கேஜி மற்றும் இங்கிலீஷ் விங்கிலிஷ் என இரண்டு படங்களையும் ஒரு சேர பார்த்தபோது எனக்கு அப்படி தோன்றியதால் அதை குறிப்பிட்டேன்.. இந்த ட்வீட்டுகளை எல்லாம் படிக்க மாட்டீர்கள் என்று நினைத்தேன்.. என் வார்த்தைகள் உங்களை காயப்படுத்தியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அட்லீ மீது துணை நடிகை புகார்அட்லீ மீது துணை நடிகை புகார் எம்.ஜி.ஆர் - எம்.ஆர்.ராதா மோதல் சினிமாவாகிறது எம்.ஜி.ஆர் - எம்.ஆர்.ராதா மோதல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in