Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரீகாந்த் ஓட்டு சர்ச்சையும், அவருடைய மறுப்பும்

23 ஏப், 2019 - 16:21 IST
எழுத்தின் அளவு:
Srikanths-Vote-creates-issue

தமிழ்நாட்டில் கடந்த வாரம் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் சில சுவாரசியமான சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. அவை அப்போது வெளிவராமல் இப்போதுதான் வெளிவந்துள்ளன.

சினிமா பிரபலங்கள் எல்லாருமே ஓட்டளித்து பின்னர் அதைப் புகைப்படம் எடுத்து அவர்களுடைய சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம். அப்படி அவர்கள் ஓட்டளித்தது பற்றி அவர்களுடைய ரசிகர்கள் பார்த்தால் அவர்களும் தவறாமல் ஓட்டளிப்பார்களே என்ற நல்லெண்ணம் தான் அதற்குக் காரணம்.

அப்படி தேர்தல் நாளன்று தான் ஓட்டளித்த புகைப்படத்தை நடிகர் ஸ்ரீகாந்த் பகிர்ந்துள்ளார். ஆனால், அவர் அன்று தேர்தலில் ஓட்டளிக்கவில்லை. அவருடைய கையில் மட்டும் அடையாள மை வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஓட்டளிக்காமல் வெறுமனே மையை மட்டும் வைத்துக் கொண்டு எதற்காக இப்படி புகைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் 'போஸ்' கொடுத்தார் என்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில், “என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. அதனால், என்னுடைய கைரேகை, கையொப்பம் வாங்கிக் கொண்டுதான் வாக்களிக்க அனுமதித்தார்கள். அப்படியிருக்கும் போது தேர்தல் அதிகாரி சொன்னதைக் கேட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ஓட்டளித்த பின்னர் என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் எங்கிருக்கிறது என்று மொபைல் ஆப்பில் பார்த்த போது அது நுங்கம்பாக்கம் வாக்குச்சாவடியைக் காட்டியது. ஆதார் கார்டு முகவரி வைத்து தற்போது என்னுடைய வாக்குச்சவாடி மாற்றப்பட்டுள்ளது. இது பற்றி தெரிந்து கொள்ளும் விதத்தில் தேர்தல் ஆணையம் எந்த முன்னேற்பாடையும் செய்யவில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பெயருக்கேற்றவாறு லாபம் கொடுக்குமா?பெயருக்கேற்றவாறு லாபம் கொடுக்குமா? தர்பாரில் இணைந்த நயன்தாரா : ரஜினி புகைப்படங்கள் லீக் தர்பாரில் இணைந்த நயன்தாரா : ரஜினி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30 ஏப், 2019 - 19:06 Report Abuse
Natarajan Ramanathan ....இந்த மொபைல் ஆப்பில் பத்துநாள் முன்னாடியே பார்த்திருக்கலாமே? எவ்வளவு முறை விளம்பரம் காண்பித்தார்கள்...
Rate this:
ccc -  ( Posted via: Dinamalar Android App )
23 ஏப், 2019 - 17:51 Report Abuse
ccc comedy piece
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in