Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடிதம் எழுதுவதை மறக்காத ஜப்பான் ரசிகர்கள்

23 ஏப், 2019 - 12:58 IST
எழுத்தின் அளவு:
Japan-fans-wishes-Ram-charan-via-letter

சமூக வலைத்தளங்கள் வருவதற்கு முன்னால், சினிமா நட்சத்திரங்களை அவர்களின் ரசிகர்கள் தொடர்பு கொள்ள இருந்த ஒரே வழி கடிதங்கள்தான். தொலைபேசி வழியாகப் பேசினால் கூட சினிமா நட்சத்திரங்கள் பேச மாட்டார்கள். அவர்களின் உதவியாளர்களே போனை எடுத்து அவர்கள் இருந்தாலும் இல்லை என்றுதான் பதிலளிப்பார்கள். ஆனாலும், சில நடிகர்கள், நடிகைகள் அவர்களுக்கு வரும் கடிதங்களுக்கு பதில் எழுதி, புகைப்படங்களை அனுப்பி வைப்பார்கள். அந்தப் பழக்கம் தற்போது முற்றிலுமாகப் போய்விட்டது.

ஆனாலும், ஜப்பான் ரசிகர்கள் அதை மறக்காமல் இன்றும் செய்து வருகிறார்கள். ரஜினிகாந்திற்குப் பிறகு அங்கு பிரபாஸ், ராம்சரண், ராணா டகுபட்டி ஆகியோருக்கு ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள். 'பாகுபலி' படம் ஜப்பான் நாட்டில் வெளியானதால் பிரபாஸ், ராணாவுக்கும், 'மகதீரா' படம் வெளியானதால் ராம்சரணுக்கும் ஜப்பான் நாட்டில் ரசிகர்கள் கிடைத்துள்ளார்கள்.

கடந்த மாதம் ராம் சரண் அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடினார். அதற்காக ஜப்பான் நாட்டிலிருந்து அவருடைய ரசிகர்கள் வாழ்த்து அட்டைகள், வாழ்த்து கடிதங்கள் ஆகியவற்றை அனுப்பி உள்ளார்கள்.

அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஜப்பான் நாட்டிலிருந்து இப்போதுதான் இந்த இனிமையான ஆச்சரியங்களைக் கிடைக்கப் பெற்றேன். இதற்காக நீங்கள் செய்த உழைப்பும், உங்கள் இனிமையான எண்ணங்களும் என்னை உண்மையிலேயே மிகவும் நேசிக்க வைத்துவிட்டன. ஜப்பான் நாட்டில் உள்ள என் ரசிகர்களுக்கு என்னுடைய அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் உங்களை சந்திப்பேன் என நினைக்கிறேன்,” என நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சோஷியல் மீடியா ஸ்டார் விஜய் தேவரகொண்டாசோஷியல் மீடியா ஸ்டார் விஜய் ... 'மகாமுனி' படப்பிடிப்பு நிறைவு 'மகாமுனி' படப்பிடிப்பு நிறைவு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
23 ஏப், 2019 - 15:14 Report Abuse
Mirthika Sathiamoorthi என்னது தெலுங்கு நடிகர்களுக்கு ரசிகர்களா? அப்போ நம்ம விஜய் அஜித்துக்கு? அவமானம்...தமிழ்நாட்டில் ரஜினியை தோற்கடிச்ச விசுவாசத்தை ஜப்பான் நாட்டில் வெளியிட்டு ரஜினியின் சாதனையை அங்கேயும் முறையடிக்கப்போறோம், அது கன்னடத்திலும், தெலுங்கிலும் பிளாப் ஆனாலும் கவலையில்லை....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in