Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டைட்டில் இல்லாமலே நிறைவடைந்தது ஜோதிகா படம்

23 ஏப், 2019 - 10:35 IST
எழுத்தின் அளவு:
Jyothika-movie-shoot-wrapped-without-title

36 வயதினிலே படத்தின் மூலம் தனது ரீ-என்டரி கணக்கை தொடங்கிய ஜோதிகா, இப்போது பிசியான நடிகை ஆகிவிட்டார். மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி என ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது அவர் நடித்து வரும் படத்தை அவரது கணவர் சூர்யா தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் இசை அமைத்துள்ளார்.

குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கும் இந்தப் படத்தில், ஜோதிகாவுடன், ரேவதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இது பிளாக் காமெடி வகை படம். ரேவதி, அரங்கேற்றவேளை படத்தில் வரும் மாஷா என்ற கேரக்டரிலேயே நடித்துள்ளார்.

படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை என்றாலும் சென்னை பின்னி மில்லில் பாடல் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டதோடு மொத்தம் 35 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் திருப்திகரமாக முடித்துள்ளனர். கடைசி நாள் படப்பிடிப்புக்கு சூர்யா வந்து படப்பிடிப்பை முடித்து வைத்தார். போஸ்ட் புரொடக்சன் பணிகளை விரைவில் துவங்க இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
களவாணி  2 தடை : சற்குணம் ஆதங்கம்களவாணி 2 தடை : சற்குணம் ஆதங்கம் ஒபாமா உங்களுக்காக : சிறு பட்ஜெட்டில் அரசியல் படம் ஒபாமா உங்களுக்காக : சிறு பட்ஜெட்டில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
25 ஏப், 2019 - 17:04 Report Abuse
Vasudevan Srinivasan அட போங்க சார் கதை இல்லாமலேயே பல படங்கள் முடியுற காலமிது டைட்டில் இல்லாமல் படம் முடிஞ்சிருச்சுன்னு ஒரு செய்தியை போடுறீங்க..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in