Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

களவாணி 2 தடை : சற்குணம் ஆதங்கம்

23 ஏப், 2019 - 10:25 IST
எழுத்தின் அளவு:
HC-stay-for-Kalavani-2-movie

9 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற படம் களவாணி. விமல், ஓவியா நடித்த இந்தப் படத்தை சற்குணம் இயக்கி இருந்தார், நசீர் தயாரித்திருந்தார். தற்போது களவாணி 2ம் பாகத்தை இயக்கி, தயாரித்து வருகிறார் சற்குணம். இதிலும் விமல், ஓவியா நடிக்கிறார்கள். படம் வருகிற மே 4ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இதுபற்றிய விபரம் வருமாறு:
களவாணி 2 படத்தை தமிழகம் மற்றும் புதுவையில் வெளியிடுவதற்கான திரையரங்க உரிமையை சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் பெற்றிருந்தது. இந்த உரிமையை மெரினா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்க 3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டது.

மெரீனா பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்பந்த விதிகளை மீறி படத்தை விற்றிருப்பதாகவும் இதனால் ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கடுமையான நஷ்டம் ஏற்படும் என்றும், எனவே படத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வெளியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஒ.குமரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூன் 10 ம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டது.

சற்குணம் ஆதங்கம்

இது தொடர்பாக வீடியோ பதிவொன்றை வெளியிட்டிருக்கும் சற்குணம், "கஷ்டப்பட்டு, கடன் வாங்கி படம் எடுத்தால் அதை தடுப்பதற்கு நிறைய சக்திகள் வருகிறது. வழக்கு தொடர்ந்துள்ள குமரன் யார் என்றே எனக்குத் தெரியாது. என்றாலும் நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். எனக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பாலா இயக்கத்தில் ஆர்யா, அதர்வா ?பாலா இயக்கத்தில் ஆர்யா, அதர்வா ? டைட்டில் இல்லாமலே நிறைவடைந்தது ஜோதிகா படம் டைட்டில் இல்லாமலே நிறைவடைந்தது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
23 ஏப், 2019 - 13:38 Report Abuse
ஆரூர் ரங் உண்மைல மெரீனா பிக்சர்ஸ் தனலட்சுமி பிக்சர்ஸ் இரண்டுல எது களவாணித் தயாரிப்பு நிறுவனம் ?
Rate this:
raja -  ( Posted via: Dinamalar Android App )
23 ஏப், 2019 - 11:25 Report Abuse
raja Im waiting
Rate this:
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
23 ஏப், 2019 - 11:09 Report Abuse
Sathyanarayanan Bhimarao பைனான்ஸ் மேட்டர்தான் சரி செயது விடுவார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in