Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2 ஆண்டுக்கு பின் ஸ்ருதி : ஏற்றம் தருமா லாபம்.?

22 ஏப், 2019 - 12:32 IST
எழுத்தின் அளவு:
Shrutihaasans-new-movie-Laabam-starts-today

நடிகர் கமல்ஹாசனின் மகள் என்பதால் அதிகமான மீடியா வெளிச்சம் பெற்றவர் ஸ்ருதிஹாசன். தமிழில் இதுவரை ஆறே படங்களில் நடித்திருந்தாலும் அதில் வேதாளம் படத்தைத் தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் அவரும் முன்னணி நடிகைகளின் பட்டியலில்தான் இருந்தார்.

விஜய் ஜோடியாக புலி, அஜித் ஜோடியாக வேதாளம், சூர்யா ஜோடியாக 7ம் அறிவு, சி 3, தனுஷ் ஜோடியாக 3, விஷால் ஜோடியாக பூஜை என முன்னணி ஹீரோக்களுடன் நடித்ததே அதற்குக் காரணம். அவர் தமிழில் நடித்து கடைசியாக வெளிவந்த படம் சி 3. அந்தப் படம் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

அவரது அப்பா இயக்கத்தில் நடித்து வந்த சபாஷ் நாயுடு ஏறக்குறைய கைவிடப்பட்ட படம்தான். வேறு எந்த மொழியிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தவர் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

அந்தப்படம் இன்று(ஏப்., 22) பூஜையுடன் ஆரம்பமானது. படத்திற்கு லாபம் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். எஸ்.பி. ஜனநாதன் இயக்க, விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு முக்கியமான ரோலில் கலையரசன் நடிக்கிறார். இதற்குப் பிறகு தமிழில் அதிகப் படங்களில் நடிக்க ஸ்ருதிஹாசன் முடிவு செய்துள்ளாராம். லாபம் ஏற்றத்தை தருமா ஸ்ருதிஹாசனுக்கு பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மிஸ்டர் லோக்கல் தள்ளிப்போனதால் 'கே 13' ரிலீஸ்மிஸ்டர் லோக்கல் தள்ளிப்போனதால் 'கே ... 'காஞ்சனா 3' - 3 நாளில் ரூ.60 கோடி வசூல் 'காஞ்சனா 3' - 3 நாளில் ரூ.60 கோடி வசூல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Balaji Elumalai - chennai,இந்தியா
22 ஏப், 2019 - 16:55 Report Abuse
Balaji Elumalai திறமையானவர்தான் ஆனால் டப்பிங் modulation கொஞ்சம் கவனித்தால் நன்றாக இருக்கும் அதேபோல் பேசாமல் இருந்தாலும் நன்றாக இருக்காது பேசவேண்டும் ஆனால் பொருத்தமாக அளவாக with correct modulation irundhal நலம்
Rate this:
pradeep -  ( Posted via: Dinamalar Android App )
22 ஏப், 2019 - 16:35 Report Abuse
pradeep தலைவி back with bang
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
22 ஏப், 2019 - 14:29 Report Abuse
BoochiMarunthu விஜய்சேதுபதியுடன் நடித்த மாதவன், திரிஷா எப்படி மீண்டும் மார்க்கெட் பிடித்தார்களோ அதே போல இவர் நினைக்கிறார் . ஆனால் படம் ஊத்திக்கும் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in