சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |
பரத் நீலகண்டன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் படம் 'கே 13'. எஸ்.பி.சினிமாஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, மதுமிதா, ரிஷிகாந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசை அமைத்துள்ளார்.
இப்படம் சைக்கோ த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பல வாரங்களாகிவிட்டநிலையில் அண்மையில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இப்படத்திற்கு சென்சாரில் 'U/A' சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்த படத்திற்கு சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தனர்.
சிகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் படம், சில பிரச்சனை காரணமாக மே 1 ஆம் தேதி வெளியாகவில்லை என்பதை அறிந்து 'கே 13' படத்தை மே-1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டனர்.
அதே தினத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள 'தேவராட்டம்' படமும் வெளியாக இருப்பதை அறிந்து தியேட்டர்களை புக் பண்ணும் வேலையில் இறங்கிவிட்டனர்..