Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிஷ்யருக்காக சிபாரிசு செய்த ஏ.ஆர்.முருகதாஸ்

22 ஏப், 2019 - 12:16 IST
எழுத்தின் அளவு:
AR-Murugadoss-recommend-his-assistant

'எங்கேயும் எப்போதும்', 'இவன் வேற மாதிரி', 'வலியவன்' ஆகிய படங்களை இயக்கியவர் சரவணன். முதல் படத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சரவணன் அடுத்தடுத்த படங்களில் சறுக்கினார். குறிப்பாக வலியவன் படம் மிகப்பெரிய தோல்வியடைந்து அந்தப்படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டது.

எனவே பட வாய்ப்பு இல்லாமல் கன்னடப்படம் இயக்கப்போனார் சரவணன். அங்கேயும் க்ளிக்காகாமல் திரும்பி வந்தார். அவருக்கு உதவிசெய்யும் நோக்கத்தில் அவருடைய குருநாதரான ஏ.ஆர்.முருகதாஸ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஆக்ஷன் கதையைச் சொல்லி வசனமும் எழுதி கொடுத்தார்.

அதுமட்டுமல்ல, அடுத்தடுத்து பல படங்களை தயாரித்து வரும் 'லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்திடம் தன்னுடைய சிஷ்யருக்காக சிபாரிசு செய்து இந்த படத்தை தயாரிக்கவும் சொல்லி இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் எழுதிய அந்த கதையைக் கேட்டதும் மறுபேச்சு பேசாமல் நடிக்க ஒப்புக்கொண்டார் த்ரிஷா. ராங்கி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கதாநாயகன் கிடையாது என்பது கூடுதல் தகவல்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மிஸ்டர் லோக்கல் தள்ளிப்போனது ஏன்.?மிஸ்டர் லோக்கல் தள்ளிப்போனது ஏன்.? மிஸ்டர் லோக்கல் தள்ளிப்போனதால் 'கே 13' ரிலீஸ் மிஸ்டர் லோக்கல் தள்ளிப்போனதால் 'கே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in