Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ரூ.150 கோடி வசூலை தொட்ட லூசிபர்

21 ஏப், 2019 - 19:48 IST
எழுத்தின் அளவு:
Lucifer-collects-Rs.150-crore

கடந்த சில ஆண்டுகளாக மலையாள சினிமா டெக்னிக்கலாகவும் அதேசமயம் வசூல் ரீதியாகவும் தனது எல்லைகளை விரிவுபடுத்தி வருகிறது.. அதற்கு சமீபத்திய உதாரணம் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் 'லூசிபர்' படம் தான்.

ஆம் வெளியான எட்டே நாட்களில் ரூ.100 கோடி வசூல் என்கிற சாதனையை படைத்த இந்தப்படம், தற்போது 21 நாட்களிலேயே ரூ.150 கோடி வசூலித்து மலையாள சினிமாவிலேயே இன்னும் ஒரு சாதனையை செய்துள்ளது. இந்தப்படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்கியிருந்தார் என்பதுதான் இதில் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கர்ப்பிணி வயிற்றை தொட்டு சர்ச்சையில் சிக்கிய சுரேஷ்கோபிகர்ப்பிணி வயிற்றை தொட்டு ... 18ஆம் படி படப்பிடிப்பை முடித்தார் பிரித்விராஜ் 18ஆம் படி படப்பிடிப்பை முடித்தார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
22 ஏப், 2019 - 12:43 Report Abuse
Mirthika Sathiamoorthi ஒரு நடிகர் இயக்குனராகும் போது பெரும்பாலும் கதை திரைக்கதை அவர்கள் கையில் இருக்கும், இரண்டாவது அது ஒரு மாஸ் மூவியாக இல்லாமல் ஒரு மெலோ ட்ராமாவாக இருக்கும், மூன்றாவது அதை வியாபாரத்துக்காக கமர்சியல் ஆக்கும் முயற்சியில் காமெடி, காதல், ஒரு இருசண்டை காட்சிகளை வைப்பர்.. கடைசியில் ஒரு சாதாரண அல்லது பரவாயில்லை ரகமாக என்கின்ற நிலையில் நடிகர் இயக்கினார் என்பதால் பெரிதாக குறைகூற மாட்டர்கள்...தோல்வியே அடைந்தாலும் பெரிதாக கவனிக்க படாது. ஆனால் பிரிதிவிராஜ், தேர்ந்தெடுத்தது ஒரு மாஸ் கதை அதுவும் இன்னொருவர் கதை...இரண்டாவது கதையின் நாயகன் ஒரு கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட சூப்பர்ஸ்டார்...இது அரசியல் கலந்த சராசரியாக தோன்றும் இன்டர்நேஷனல் டானை பற்றிய கதை.. அதில் ஒரு சூப்பர்ஸ்டார் நடிக்கும்போது இயக்குனரை அவரின் கண்முன் நிற்கும் சவால்கள், அதையெல்லாம் கடந்து வெற்றிபெற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவருக்கு உண்டு. அந்த படத்தின் தோல்வி அவருக்குமட்டுமல்ல அவரை நம்பி வாய்ப்பு கொடுத்த அந்த சூப்பர்ஸ்டாருக்கும் சங்கடம் (ஹீரோ அறிமுகம் படம் ஆரம்பித்து 20 நிமிடங்கள் கடந்துதான், அந்த அறிமுகம் அதை தொடர்ந்து வரும் காட்சிகள் பக்க மாஸ்)...அதுமட்டுமல்ல, இயக்குனரும் ஒரு மாஸ் நடிகர்..அவருக்கும் ரசிகர் பலம் அதிகம்...அவர் இயக்குனராய் தனது ரசிகர்களிடமும் பாராட்டுபெற்றாகவேண்டும்...இத்தனை மலைகளையும் கடந்து மிக சரியான திட்டமிடல் மற்றும் நேர்த்தியான உழைப்பின்மூலம் ஒரு மாபெரும் வெற்றிபடத்தை கொடுத்ததற்கு (சில குறைகள் இருந்தாலும்) தாராளமாக கைதட்டி பாராட்டலாம்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in