நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
'ஹரஹர மகாதேவகி' 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து', 'மிஸ்டர் சந்திரமௌலி' ஆகிய படங்களைத் தொடர்ந்து கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தேவராட்டம்'. சசிகுமார் நடித்த குட்டிப்புலி, கொடிவீரன், கார்த்தி நடித்த கொம்பன், விஷால் நடித்த மருது ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கியிருக்கும் படம் இது.
இந்த படத்தை 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் தயாரித்துள்ளது. 'ஹரஹர மகாதேவகி' படத்தில் நடித்தபோது அந்தப்படம் வெற்றியடைந்தால் தன்னுடைய நிறுவனத்துக்கு 3 படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்று கவுதம் கார்த்திக்குடன் அக்ரிமெண்ட் போட்டார் 'ஸ்டுடியோ கிரீன்' ஞானவேல்ராஜா. அதன்படி இரண்டாவதுபடமாக 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்தில் நடித்த கவுதம் கார்த்திக் 3 ஆவது படமாக நடித்த படம் தான் தேவராட்டம்.
மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சூரி, ராமதாஸ், போஸ் வெங்கட், உட்பட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் தயாராகி சில மாதங்கள் ஆன நிலையில் கடந்த வாரம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது.
ஆனாலும் 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் தயாரித்துள்ள மற்றொரு படமான மிஸ்டர் லோக்கல் படத்தை ரிலீஸ் செய்துவிட்டபிறகே தேவராட்டம் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். மே 1-ஆம் தேதில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த மிஸ்டர் லோக்கல் படம் தற்போது மே 17 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுவிட்டது.
எனவே அந்தப்படம் வெளிவர இருந்த தேதியில் அதாவது மே 1 ஆம் தேதியில், 'தேவராட்டம்' படத்தை வெளியிட இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மிஸ்டர் லோக்கல் படத்துக்காக புக் பண்ணிய தியேட்டர்களில் தேவராட்டம் வெளியாகிறது.
தேவராட்டம் அக்கா, தம்பி உறவை மையப்படுத்திய கதை என்பது உப தகவல்.