ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு! | புராண படத்தில் ஆரி! | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி | ஐதராபாதில், 'வலிமை' படப்பிடிப்பு | டிச., 11ல் ஐதராபாத்தில் துவங்குகிறது ‛ரஜினி 168' | மீண்டும் ஜெமினியாக துல்கர் |
தமிழ் சினிமாவில் முன்னணி ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவர் விஷால். தான் நடித்த இரண்டாவது படமான 'சண்டக்கோழி' படத்திலிருந்தே அவர் ஆக்ஷன் பாதையில் மட்டும் பயணித்து வருகிறார்.
அவர் தற்போது நடித்து முடித்துள்ள 'அயோக்யா' படத்தின் டீசர் விஷாலுக்கு புதிய சாதனையை உருவாக்கிக் கொடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அவரது நடிப்பில் வெளிவந்த 'துப்பறிவாளன், இரும்புத் திரை, சண்டக்கோழி 2' ஆகிய படங்களின் டீசர்களை விட 'அயோக்யா' டீசர், 65 லட்சம் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
'சண்டக்கோழி 2' டீசர் 62 லட்சம் பார்வைகளையும், 'இரும்புத் திரை' டீசர் 50 லட்சம் பார்வைகளையும், 'துப்பறிவாளன்' டீசர் 17 லட்சம் பார்வைகளையும் மட்டுமே பெற்றிருக்கிறது.
'அயோக்யா' டீசர் புதிய சாதனையை படைத்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகியுள்ள டிரைலரும் யு டியுப் டிரென்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. அதற்குக் கிடைத்துள்ள வரவேற்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.
டெம்பர் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கான இப்படம், ஹிந்தியில் சிம்பா என்ற பெயரில் ரீ-மேக்காகி, வௌியாகி பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை புரிந்தது. அதனால் தமிழ் படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.