Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்பு, கவுதம் கார்த்திக் படம், தமிழுக்கு வரும் கன்னட இயக்குனர்

21 ஏப், 2019 - 12:05 IST
எழுத்தின் அளவு:
Simbu,-Guatham-Karthik-in-Studio-Green-Production-:-Kannada-director-debut-in-Tamil

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், சிம்பு, கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்க உள்ள படத்தை கன்னட இயக்குனர் நார்தன் இயக்க உள்ளார். இப்படம் பற்றிய அறிவிப்பை பட நிறுவனம் இன்று(ஏப்.,21) வெளியிட்டது. அந்நிறுவனத்தின் 20வது தயாரிப்பு இது.

இந்தப் படத்தை இயக்கும் நார்தன், கன்னடத்தில் 2017ம் ஆண்டு வெளிவந்த 'முப்டி' என்ற படத்தை இயக்கியவர். அந்த கன்னடப் படத்தின் ரீமேக் ஆகத்தான் சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்கும் படம் உருவாக உள்ளது.

'முப்டி' படத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி என இரு கதாநாயகர்கள் நடித்துள்ளனர். ஒரு அன்டர்வேர்ல்டு தாதா, ஒரு போலீஸ் அதிகாரி ஆகியோருக்கு இடையே நடக்கும் கதைதான் 'முப்டி' படத்தின் கதை. சிம்பு, தாதாவாகவும், கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது.

முதலில் இந்தப் படத்தில் சிம்பு, ஆர்யா இணைந்து நடிப்பதாகச் சொல்லப்பட்டது. தற்போது ஆர்யாவிற்குப் பதிலாக கவுதம் கார்த்திக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சிந்துபாத்துக்கு சிக்கலை தந்த மிஸ்டர் லோக்கல்சிந்துபாத்துக்கு சிக்கலை தந்த ... அயோக்யா டீசர், விஷாலின் புதிய சாதனை அயோக்யா டீசர், விஷாலின் புதிய சாதனை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Abdul Rahman - Madurai,இந்தியா
21 ஏப், 2019 - 19:36 Report Abuse
Abdul Rahman ஆமாம். ஈவேரா, கருணாநிதி, அர்ஜுன், பிரகாஷ்ராஜ், ரஜினி,....
Rate this:
ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
21 ஏப், 2019 - 13:07 Report Abuse
ngopalsami கன்னடர்களும் நம் சகோதரர்களே. வந்தாரை வாழவைக்கும் தமிழகம். மொழி, மதம், இனம், கலாச்சாரம் இவற்றை அனைத்தையும் தவிர்த்து, திறமையை பாராட்டி ஏற்றுக்கொள்பவன் தமிழன் ஒருவனே. இதற்க்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உள்ளன. நல்ல திறமையை பாராட்டி ஊக்குவிப்பவர்கள் தமிழ் மக்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in