Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர மக்கள் கண்டனம்

20 ஏப், 2019 - 17:24 IST
எழுத்தின் அளவு:
Andhra-people-condemned-for-Ram-Gopal-Varma

சர்ச்சைக்குரிய இயக்குனரான ராம்கோபால் வர்மா மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், நடிகருமான என்டிஆர் வாழ்க்கை வரலாற்றை 'லட்சுமியின் என்டிஆர்' என்ற பெயரில் படமாக்கினார். லட்சுமியை என்டிஆர் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பின் அவருடைய குடும்பத்திலும், தெலுங்கு தேசம் கட்சியிலும் என்ன நடந்தது என்பது பற்றிய படமாக அந்தப் படம் இருந்தது. அந்தப் படத்தை ஆந்திராவில் வெளியிட கடைசி நேரத்தில் தடை வாங்கினார்கள். அதனால், தெலுங்கு பேசும் மற்றொரு மாநிலமான தெலங்கானாவில் மட்டும் வெளியானது.

'லட்சுமியின் என்டிஆர்' படத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வில்லன் போல ராம்கோபால் வர்மா சித்தரித்திருந்தார் என்று தெலுங்கு தேசக் கட்சியினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். தேர்தல் முடிந்த பிறகுதான் அங்கு படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதனிடையே, இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் அடுத்து இயக்க உள்ள தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர்ராவ் பற்றிய பயோபிக் படமான 'டைகர் கேசிஆர்' படத்தின் முதல் பார்வையை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

அவருடைய படத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், “அமைதியான காந்தி எப்படி பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவைப் பெற்றாரோ, அது போலவே ஆவேசமான காந்தி கேசிஆர், ஆந்திரா மக்களிடமிருந்து தெலங்கானாவைப் பெற்றார்” என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஆந்திர மக்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.


பின்னர், “என் படம் ஆந்திர மக்களை வில்லன்களாகக் காட்டாது. ஆனால், சில ஆந்திராவைச் சேர்ந்த சில பெரிய தலைவர்கள் எந்தக் காரணமும் இல்லாமல் மாநிலத்தைப் பிரிக்க முயற்சித்ததைப் பற்றிக் காட்டும்,” என சமாளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யா படத்தில் அபர்ணா முரளி எப்படி.?சூர்யா படத்தில் அபர்ணா முரளி எப்படி.? மோடியின் வெப் சிரீஸ்க்கும் தேர்தல் ஆணையம் தடை மோடியின் வெப் சிரீஸ்க்கும் தேர்தல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Ram Sekar - mumbai ,இந்தியா
21 ஏப், 2019 - 13:07 Report Abuse
Ram Sekar இவன் ஒரு ஈதரை. படம் பண்ண வக்கில்லாமல் இப்படி அலையுறான்
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
20 ஏப், 2019 - 19:06 Report Abuse
Vasudevan Srinivasan தேவையில்லாமல் சர்ச்சையை கிளப்பும் பயோபிக்குகளுக்கு தடை விதிக்கவேண்டும்.. பிரச்சினை வரும் என்று தெரிந்தும் படம் பண்ணுவது சுய விளம்பரத்துக்கோ என்று சந்தேகம் வருகிறது..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in