Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யா படத்தில் அபர்ணா முரளி எப்படி.?

20 ஏப், 2019 - 17:03 IST
எழுத்தின் அளவு:
How-Aparna-Balamurali-selected-in-Suriya-film

சூர்யா தற்போது சுதா கொங்கரா டைரக்சனில் சூரரைப் போற்று என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக முன்னணி நடிகைகள் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தான் வளர்ந்து வரும் மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது திரையுலகில் மிகப் பெரிய ஆச்சரியத்தை எழுப்பியுள்ளது.. இது வழக்கத்தில் இருந்து மாறுபட்ட சூர்யா படமாக உருவாகிறது என்பதால் கதைக்கு ஏற்றபடி இவரை கதாநாயகியாக தேர்வு செய்துள்ளார்களாம்.

தற்போது முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பற்றி கூறியுள்ளார்.. “நான் கதாநாயகியாக அறிமுகமான மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற படத்தில் நடித்த ஜிம்ஸி கேரக்டரை பார்த்து விட்டுத்தான் சுதா கொங்கரா 'சூரரைப் போற்று' படத்தில் நடிக்க ஆடிசனுக்கு அழைத்தார. ஆடிஷனிலும் தேர்ச்சி பெறவே இந்த பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது” என்று கூறியுள்ளார் அபர்ணா.

அதுமட்டுமல்ல இவர் முதல் படமாக அறிமுகமான மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் கூட நூற்றுக்கணக்கானவர்களுக்கு மேல் ஆடிஷன் செய்யப்பட்டது. ஆனால் இவர் தான் தேர்வானார்.

அதேப்போல ராஜீவ் மேனன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான சர்வம் தாராளமயம் படத்திற்கு கூட ஆடிஷன் வைத்தே கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டாராம் அபர்ணா. இப்படி, தான் ஆடிஷனில் தேர்வாகும் படங்களில் எல்லாமே சென்டிமென்டாக தனக்கு நல்ல கதாபாத்திரங்களாக அமைந்து வருவதாக கூறியுள்ளார் அபர்ணா பாலமுரளி

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காஞ்சனா 3 : விமர்சனம் ஒன்று, வசூல் வேறொன்று ?காஞ்சனா 3 : விமர்சனம் ஒன்று, வசூல் ... ராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர மக்கள் கண்டனம் ராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in