Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காஞ்சனா 3 : விமர்சனம் ஒன்று, வசூல் வேறொன்று ?

20 ஏப், 2019 - 16:41 IST
எழுத்தின் அளவு:
Kanchana-3-review-normal,-but-collection-abnormal

ராகவா லாரன்ஸ் இயக்கம், நடிப்பில் நேற்று வெளியான படம் 'காஞ்சனா 3'. முந்தைய இரண்டு பாகங்களம் நன்றாக வசூலித்ததால், இந்தப் படத்தைக் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு நேற்று வெளியிட்டார்கள்.

படத்தைப் பார்த்த பலரும் முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் அதே மாதிரியான கதையில் இருப்பதாகச் சொன்னார்கள். மூன்று பாகங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. சில நடிகர்கள் மட்டும்தான் மாறியிருக்கிறார்கள். மற்றபடி, பேய் பயமுறுத்தல், பழி வாங்குதல் எல்லாமே ஒன்றுதான் என்று பரவலான விமர்சனம் எழுந்தது. அரைத்த பேயையை மீண்டும் ராகவா லாரன்ஸ் அரைத்திருக்கிறார் என்பதுதான் பொதுவான கருத்தாக இருந்தது.

அதே சமயத்தில் நேற்றைய முதல் நாள் வசூலில் இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 10 கோடியை வசூலித்திருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலுங்கானாவில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ள இந்தப் படத்திற்கு நேரடித் தெலுங்குப் படங்கள் அளவிற்கு வசூல் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் பட்ஜெட் பெரிய அளவில் இல்லாத காரணத்தால் அடுத்த சில நாட்களிலேயே இந்தப் படம் போட்ட முதலீட்டை வசூலித்துவிடும் என்கிறார்கள். முந்தைய பாகங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
த்ரிஷா நடிக்கும் ராங்கித்ரிஷா நடிக்கும் ராங்கி சூர்யா படத்தில் அபர்ணா முரளி எப்படி.? சூர்யா படத்தில் அபர்ணா முரளி எப்படி.?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Sangeedamo - Karaikal,இந்தியா
23 ஏப், 2019 - 13:38 Report Abuse
Sangeedamo ராகவ லாரன்ஸ் வித்தியாசமான சிந்தனையுள்ளவர், நல்ல மனிதர், நல்ல டான்சர், ஆனால் தயவு செய்து இனிமேல் காஞ்சனா 3 போன்ற படங்களை தவிர்ப்பது நல்லது என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in