Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பேட்ட, விஸ்வாசம்' 100வது நாள் : மீண்டும் ரசிகர்கள் சண்டை

20 ஏப், 2019 - 12:39 IST
எழுத்தின் அளவு:
100-Days-:-Petta,-Viswasam-clash-again

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட', அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி ஒரே நாளில் வெளியாகின. வெளியான நாட்களிலிருந்தே இரண்டு படங்களின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கடும் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

'விஸ்வாசம்' படம்தான் தமிழ்நாடு முழுவதும் அதிக வசூலைக் குவித்தது என அஜித் ரசிகர்களும், உலக அளவில் 'பேட்ட' படம்தான் அதிக வசூலைக் குவித்தது என ரஜினி ரசிகர்களும் சண்டையிட்டனர். 100 கோடி வசூலை முதலில் பெற்ற படம் 'விஸ்வாசம்' என்று அஜித் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இதனால், கோபமடைந்த ரஜினி ரசிகர்களும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர்.

அந்த சண்டை அத்துடன் முடிந்தது என்று பார்த்தால் நேற்று 100வது நாளிலும் நடந்த்து. முதலில் 'விஸ்வாசம்' படக்குழுவினர் 100வது நாள் போஸ்டரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அடுத்து 'பேட்ட' குழுவினர் 100வது நாள் போஸ்டரை வெளியிட்டனர். இதில் 'பேட்ட' இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் டுவிட்டர் பக்கம் சென்ற அஜித் ரசிகர்கள் அவரை மிகவும் கேவலமான கெட்ட வார்த்தைகளாலும், அவருடைய உடலமைப்பை வைத்து மோசமான கமெண்ட்டுகளைப் பதிவிட்டனர்.

இரண்டு படங்களுமே 100வது நாளில் எந்தத் தியேட்டரில் ஓடுகிறது என்றுதான் தெரியவில்லை. 'பேட்ட' படத்தை தமிழ்ப் புத்தாண்டு அன்று டிவியில் ஒளிபரப்பிவிட்டார்கள். 'விஸ்வாசம்' படத்தை 50வது நாளிலேயே மொபைல் ஆப்பில் வெளியிட்டுவிட்டார்கள். ஒருவேளை படம் வெளியாகி 100 நாள் ஆகிவிட்டது என்பதை மட்டும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடியிருப்பார்களோ...?.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாரா கோரிக்கை ஏற்பு : நடிகர் சங்கத்தில் விஷாகா குழுநயன்தாரா கோரிக்கை ஏற்பு : நடிகர் ... மும்பையில் கீர்த்தி சுரேஷ், ஜான்வி கபூர் சந்திப்பு மும்பையில் கீர்த்தி சுரேஷ், ஜான்வி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in