Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யார் இந்த ஸ்வேதா திரிபாதி?

19 ஏப், 2019 - 12:42 IST
எழுத்தின் அளவு:
introduction-about-swetha-tripathi

இன்று வெளிவந்துள்ள மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 96 படத்திற்கு பிறகு வரும் நேர்த்தியான காதல் படம். இந்த படத்தின் டைட்டில் கேரக்டரில் அதாவது மெஹந்தி என்ற சர்க்கஸ்காரியாக நடித்திருப்பவர் ஸ்வேதா திரிபாதி. யார் இந்த ஸ்வேதா திரிபாதி...

அந்தமானை பூர்வீகமாக கொண்ட ஸ்வேதா டெல்லியில் பிறந்து வளர்ந்தார். அப்பா ஐ.ஏ.எஸ் அதிகாரி, அம்மா டீச்சர். படித்தது எல்லாமே காண்வென்டில்தான். மீடியா மீது அதீத ஈடுபாடு கொண்ட ஸ்வேதா, ஆங்கில நாடகம், மாடலிங், விளம்பரம் என பிசியானார். பத்திரிகைகளில் போட்டோ எடிட்டராக பணியாற்றினார்.


2015ம் ஆண்டு வெளிவந்த இந்திப் படமான மசான் ஸ்வேதாவை அடையாளம் காட்டியது. அந்தப் படத்தில் அவர் இரண்டாவது நாயகியாகத்தான் நடித்தார். ஆனால் அவரை ரசிகர்கள் கொண்டாடினார்கள். கேன்ஸ் உலகப்பட விழா முதல் பல்வேறு விழாக்களில் விருதுகளை அள்ளினார் ஸ்வேதா. அந்த அளவிற்கு காதல் ததும்ப ததும்ப நடித்திருந்தார். அதானல்தான் காதலை மையமாக கொண்ட மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நடிக்க அவரை வடநாட்டில் இருந்து அழைத்து வந்தார்கள். கதைப்படியும் அவர் வடநாட்டுப் பெண்தான்.


அதன்பிறகு பல இந்திப் படங்களில் நடித்தார். பிரபல இந்தி சின்னத்திரை தொடர்கள், வெப் சீரிசிலும் நடித்துள்ளார். தற்போது மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். 96 படத்தில் த்ரிஷா (ஜானு) கொண்டாடப்பட்டதைப்போல ஸ்வேதாவும் (மெஹந்தியும்) கொண்டாடப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சர்கார் பாணியில் வாக்களித்த நெல்லை வாக்காளர்சர்கார் பாணியில் வாக்களித்த நெல்லை ... சீயான்கள் யார்? இயக்குனர் விளக்கம் சீயான்கள் யார்? இயக்குனர் விளக்கம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
19 ஏப், 2019 - 13:08 Report Abuse
Vasudevan Srinivasan திறமையாளர்களுக்கு எப்போதுமே தமிழ்ப்பட ரசிகர்கள் சிவப்பு கம்பளம் விரிப்பார்கள் குஷ்பூ, ஜோதிகா, தேவயானி, காஜல் அகர்வால், தமன்னா இன்னும் பலர் வடக்கிலிருந்து வந்தாலும் தெற்கில் குறிப்பாக தமிழில் பெரு வெற்றி பெற்றவர்கள் அந்த வெற்றி வரிசையில் ஸ்வேதா மேடமும் இணைய வாழ்த்துக்கள்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in