Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம்

18 ஏப், 2019 - 13:44 IST
எழுத்தின் அளவு:
My-vote-spoiled-says-Ramesh-Khanna

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரையுலகினர் பலரும் காலையிலேயே ஆர்வமாய் ஓட்டளித்தனர். நடிகரும், இயக்குநருமான ரமேஷ் கண்ணா, காலை 6 மணிக்கே ஒட்டளிக்க சென்றார். ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை என கூறிவிட்டனர். இதனால் ஓட்டுப்போட முடியாமல் வெளியேறிய ரமேஷ் கண்ணா, தனது ஆதங்கத்தை வீடியோவாக வெளிப்படுத்திருக்கிறார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது : ஒவ்வொரு குடிமகனும் ஓட்டு போடுவது கடமை என்று தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்கிறது. நாகர்கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்ததால் காலை 6 மணிக்கே ஓட்டு போனேன். ஆனால் ஓட்டு பட்டியலில் என் பெயர் இல்லை என கூறிவிட்டார்கள். இது எனது வாக்காளர் அடையாள அட்டை. பட்டியலில் என் பெயர் இல்லை என்றால் அது யாருடைய தவறு. வாக்காளர் அடையாள அட்டையை வைத்து ஓட்டு போடும் உரிமையை நீங்கள் தர வேண்டும். என் மனைவிக்கு ஓட்டு உள்ளது, எனக்கு இல்லை என்கிறார்கள். இதற்கு யார் பொறுப்பேற்று கொள்வது.

என்னுடைய ஓட்டு வீணாகிவிட்டது. இனிமேல் நான் எப்படி ஓட்டு போடுவேன். இப்போது நாகர்கோவில் போகிறேன், அங்கு எனது ஓட்டை போட அனுமதி அளிப்பார்களா.? இதற்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இனி கட்சிக்காரங்க மட்டும் தான் ஓட்டு போட முடியும். புதியவர்கள் வர வாய்ப்பு இல்லை. சினிமாக்காரங்க சினிமாக்காரருக்கு தான் ஓட்டு போடுவார் என்ற நம்பிக்கையில் என் ஓட்டை எடுத்துவிட்டார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது.

இவ்வாறு ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
நாட்டை தீர்மானிக்கும் முடிவு உங்கள் கையில் : விஜய் சேதுபதிநாட்டை தீர்மானிக்கும் முடிவு உங்கள் ... ரவுடி பேபி - 40 கோடி சாதனை ரவுடி பேபி - 40 கோடி சாதனை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

meenakshisundaram - bangalore,இந்தியா
25 ஏப், 2019 - 04:33 Report Abuse
meenakshisundaram ஆமா, இவரு போட்டிருந்தாலும் ஒரு வேலை வீண் ஆகியிருக்கலாம் .புலம்ப வேண்டாம் ,அவ்வளவு அக்கறை இருந்திருந்தால் முன்னமே செக் செய்திருக்க வேண்டும்....
Rate this:
vsbjd -  ( Posted via: Dinamalar Android App )
19 ஏப், 2019 - 17:31 Report Abuse
vsbjd actors are acting in real life, they lead fake in all walks of life, we should not respond any actors in our life
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19 ஏப், 2019 - 12:00 Report Abuse
A.George Alphonse "Oru panai Sotril Oru Sotrai dhan padham" parpargal.Since it has happened with an actor this matter has came to the light .Like this so many lakhs persons names were d in the voters list through out country including me. The Election Commission has just wasted the Hard earned Tax payers monies in this way without d the voters lists through out country.Hereafter let the election commission carryout it's duties carefully and correctly in coming days without such mistakes.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19 ஏப், 2019 - 11:56 Report Abuse
Natarajan Ramanathan ஒரே ஒரு SMS அனுப்பி ஓட்டு உரிமையை உறுதி செய்துகொள்ளகூட முடியாத அளவு ஒன்றும் பிஸியான நடிகன் இல்லையே?
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
18 ஏப், 2019 - 21:52 Report Abuse
Bhaskaran வாக்காளர் பட்டியலை சரிபார்த்த அரசு அலுவலர் அல்லது ஆசிரியர் தான் இந்த மாதிரி யான புத்திசாலித்தனமான வேலை செய்திருப்பான் அவர் நீடூழி வாழ்க இன்னும் இதனைப் போல் பலரின் பெயரை நீக்கியிருக்கும் அவரை கண்டுபிடித்து பணிநீக்கம் செய்யணும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in