Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்து கொடுத்த சிவகார்த்திகேயன்

18 ஏப், 2019 - 12:46 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-give-treat

இயக்குனர்கள் பொன்ராம், எம்.பி.கோபி ஆகியோரின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்குவிப்பதற்காக இரண்டுநாள் கிரிக்கெட் விழா நடத்தினர். மதுரை மாவட்டத்தை சேர்ந்த 16 அணிகள் கலந்து கொண்டன.

இதில் வெற்றி பெற்ற அணிக்கு சிவகார்த்திகேயன் பரிசு வழங்குவதாக இருந்தது. ஆனால் அவரால் அங்கு செல்ல முடியாததால் வெற்றி பெற்ற வீரர்களை சென்னைக்கு அழைத்து மிஸ்டர் லோக்கல் படப்பிடிப்பில் அவர்களுக்கு விருந்து அளித்து பரிசு வழங்கி கவுரவித்தார். இதுகுறித்து இயக்குனர் பொன்ராம் கூறியதாவது:

நாங்கள் படித்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு விழா நடத்த வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை. அப்போதுதான் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த கனா படம் எங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. அந்த ஸ்பார்க்கில் எங்கள் ஊரில் கிரிக்கெட் மேட்ச் நடத்தலாம் என்று முடிவு எடுத்தோம்.

சிவகார்த்திகேயனை நாங்கள் நடத்தும் கிரிக்கெட் விழாவிற்கு வருகை தருமாறு அழைத்தோம். அவர் இடைவிடாத படப்பிடிப்பில் இருக்கும் காரணத்தால் விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதால் அவருக்கு பதிலாக கனா பட ஹீரோ தர்ஷன், அவர் ரசிகர் மன்ற மாநில தலைவர் மோகன் தாஸ் இயக்குனர் ராஜேஷ் ஆகியோரை விழாவிற்கு அனுப்பி வைத்தார்.

ஆனாலும் அவருக்கு தன்னால் நேரில் செல்ல முடியவில்லையே என்ற மனக்குறை இருந்தது. இதற்காக வெற்றி பெற்ற அணியினரை சென்னைக்கு வரவழைத்து விருதும், விருந்தும் கொடுத்து கவுரவப்படுத்தினார். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வெளிநாடுகளில் விஷால், விக்ரம் - வாக்களிக்க மாட்டார்கள் ?வெளிநாடுகளில் விஷால், விக்ரம் - ... ஒரே படம் ஓகோன்னு லைக் ஒரே படம் ஓகோன்னு லைக்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in