Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குழப்பத்திற்கு பின்னர் ஓட்டளித்த சிவகார்த்திகேயன்

18 ஏப், 2019 - 11:35 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-did-not-vote

இந்திய பார்லிமென்ட் தேர்தலின் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு இன்று(ஏப்., 18) நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 38 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறும் ஓட்டுப்பதிவில் காலை முதலே சினிமா பிரபலங்கள் பலர் வாக்களித்தனர்.

சிவகுமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜுன், அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஜய் ஆண்டனி, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக், நாசர், கருணாஸ், முருகதாஸ், குஷ்பு, மீனா, ஜோதிகா, ஏ.ஆர்.ரஹ்மான், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் ஓட்டளித்தனர்.

அதேசமயம் சிலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாத காரணத்தால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து திரும்பினர்.

ரமேஷ் கண்ணா, ரோபோ சங்கர் ஆகியோரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை. இது குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா தனது கண்டனத்தை வீடியோவாக வெளியிட்டு பதிவு செய்துள்ளார்.


குழப்பத்திற்கு பின்னர் ஓட்டளித்த சிவகார்த்திகேயன்


சிவகார்த்திகேயனும் காலையில் ஓட்டளிக்க சென்றார். ஆனால் அங்கு ஏற்பட்ட ஏதோ குழப்பத்தினால் அவர் ஓட்டளிக்கவில்லை. இந்நிலையில் சற்றுமுன்னர், ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கத்தில் உள்ள ஓட்டுச்சாவடி ஒன்றில் ஓட்டளித்தார்.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் தரப்பில் விசாரித்தோம், ஆனால் அவர்கள் சரியான பதில் தரவில்லை. ஓட்டளித்ததை சிவகார்த்திகேயன் டுவிட்டர் பதிவுட்டுள்ளார். மேலும், "ஓட்டளிப்பது உங்களது உரிமை, அந்த உரிமைக்காக போராடுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனின் இந்த பதிவின் மூலமே அவர் ஓட்டளிப்பதில் ஏதோ குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது.


Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்த தலைமுறையை காப்பாற்ற மரம் நடுங்கள்: சமுத்திரகனிஅடுத்த தலைமுறையை காப்பாற்ற மரம் ... ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் ஓட்டளிப்பு ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

Venkatakrishnan Parthasarathy - Chennai,இந்தியா
19 ஏப், 2019 - 09:14 Report Abuse
Venkatakrishnan Parthasarathy எல்லோருக்கும் இந்த வாய்ப்பு தரபடவில்லை. பல சாமானியர்கள் வீட்டிற்கு ஒட்டு போடாமல் சென்றார்கள். இதிலும் நடிகர் என்றால் பாரபட்சம்.
Rate this:
Mandakolathur Subramanian - Chennai,இந்தியா
18 ஏப், 2019 - 21:23 Report Abuse
Mandakolathur Subramanian திரு. சிவ கார்த்திகேயன் ஒரு பொறுப்பான இந்திய குடிமகன். சட்டங்கள் பற்றி நன்கு தெரிந்தவர். நன்கு சட்டங்கள் தெரிந்தவர்களே இப்படிச் செய்தால் படிப்பறிவு இல்லாதவர்கள் செய்வதைப் பற்றி நாம் குற்றம், குறை காண முடியாமா ஒருவரின் பெயர், முகவரி இதுபோன்ற எல்லாத் தகவல்களும் சம்பந்தப்பட்ட தேர்தல் ரெக்கார்டுகளில் சரியாக உள்ளதா என்பது இந்தியக் குடிமகனின் பொறுப்பு இல்லையா? சும்மா 'ட்விட்டரில்' ட்வீட் செய்து விட்டால் போதுமா? We must do our duty first. "மணியன்" சேப்பல் ஹில், வட கரோலினா, யு. எஸ். 27516.
Rate this:
shan - jammu and kashmir,இந்தியா
18 ஏப், 2019 - 20:29 Report Abuse
shan ஊருக்கு உபதேசம் செய்யலாம் தனக்கு உள்ள மடத்தனத்தை சொல்ல மட்டனுக இந்த நடிகர்கள் . நாலு படம் நடித்து காசு வந்து விட்டால் அறிவாளி போல நடிக்கிறானுகள். அதே மடையா நடிகர்களே நெட்டில் தேர்தல் ஆணைய முகவரியில் தனது நம்பரை போட்டு சரி இருக்க இல்லையா என்று ஏன் சரி பார்ப்பது இல்லை aadhar கேட்டல் குடுக்க மாட்டேங்க
Rate this:
Girija - Chennai,இந்தியா
18 ஏப், 2019 - 19:38 Report Abuse
Girija பல மாதங்களாக இணைய தளத்திலும் முகாம்களிலும் விளம்பரம் மூலமும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து தவறு இருந்தது பெயர் இல்லை என்றால் தொடர்பு கொள்ளவுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள் அப்போதெல்லாம் தன கடமையை செய்யாமல் இப்போது உரிமையை பற்றி பேசுகிறார் , இவர் மனைவியின் பெயர் உள்ளதாம் இவர் பெயர் இல்லையாம் ? படித்தவன் தானே நீ எப் எம் மிலும் டீவீ சினிமா என்று ஜனங்களுக்கு அறிவுரை அள்ளிவிட்டுவிட்டு இப்போது உரிமையும் உரிமை அதுதான் எம்ஜிஆர் ஜெ க்கு பிறகு சினிமாவில் இருந்து யாராவது அரசியலுக்கு வந்தால் மக்கள் நக்கலடிக்கின்றனர். அடிப்படை அறிவு கூட இல்லையென்றால் என்ன செய்வது ?
Rate this:
Siva - Aruvankadu,இந்தியா
18 ஏப், 2019 - 18:39 Report Abuse
Siva தமிழ் நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டது.. இனியாவது கொஞ்ச நாட்கள் அமைதியாக குடும்பத்துடன் செலவழிங்க....
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in