விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
தேர்தல் பரபரப்பில் பல வீடியோக்களைப் பார்த்து பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். தேர்தல் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் புதுப் படங்களின் டீசர், டிரைலர் வெளியீடு என அரசியல் வீடியோக்களுக்குப் போட்டியாக புது சினிமா வீடியோக்களும் வந்து கொண்டிருக்கின்றன.
பரபரப்பான புது வீடியோக்கள் நிறைய வந்தாலும் சினிமா பாடல் ரசிகர்கள் இன்னும் 'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' பாடல் வீடியோவைப் பார்ப்பதை நிறுத்தவில்லை. இந்தப் பாடல் யு டியூபில் வெளியான நாளிலிருந்து அடுத்தடுத்து பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.
அடுத்த சாதனையாக விரைவில் 40 கோடி பார்வைகளை இந்தப் பாடல் தொட உள்ளது. தற்போது 39 கோடியே 80 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ள இந்தப் பாடல் அடுத்த சில தினங்களில் 20 லட்சம் பார்வைகளை எளிதாகக் கடந்து 40 கோடி சாதனை, அதாவது 400 மில்லியன் சாதனையைப் புரிந்துவிடும். அப்படி ஒரு சாதனை நிகழவிருப்பது தமிழ் சினிமா பாடலுக்கான தனிப்பெரும் நிகழ்வாகவே இருக்கும்.