Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமிதாப், சிரஞ்சீவி வழியில் அடுத்து யார்?

17 ஏப், 2019 - 13:32 IST
எழுத்தின் அளவு:
Amithabh,-Chiranjeevi-who-will-be-the-next.?

இந்திய அரசியலுக்கும், சினிமாவுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என நமக்குப் பரிச்சயமான பல சினிமாத் துறைகளில் இருந்து அரசியலுக்குச் சென்றவர்கள் ஏராளம். சிலர் எம்.பி.க்கள் ஆக, சிலர் எம்எல்ஏக்கள் ஆக சிலர் மந்திரிகளாகவும் ஆகியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் தற்போது அரசியலை விட்டே ஒதுங்கிவிட்டார்கள்.

அவர்களில் முக்கியமானவர்கள் ஹிந்தித் திரையுலகத்தைச் சேர்ந்த அமிதாப்பச்சன், தெலுங்குத் திரையலகத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி. ராஜீவ் பிரதமராக இருந்தபோது அவரது அழைப்பின் பேரில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் அமிதாப். பின்னர் சில வேறுபாடுகளால் அந்தக் கட்சியை விட்டு விலகினார். பின்னர் அரசியலில் இருந்தே தன்னை ஒதுக்கிக் கொண்டு சினிமாவில் தீவிரமாக நடிக்க ஆரம்பித்து இன்று வரை நடித்து வருகிறார்.

தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி, பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு, எம்எல்ஏ ஆனார். பின்னர் கட்சியை காங்கிரசுடன் இணைந்து ராஜ்ஜிய சபா எம்.பி. ஆகி மந்திரி ஆகி பின்னர் பதவிக்காலம் முடிந்ததும் அரசியலை விட்டே விலகினார். தற்போது சினிமாவில் மட்டுமே தீவிரமாக நடித்து வருகிறார்.

அமிதாப், சிரஞ்சீவி போல சினிமாவிலிருந்து அரசியலுக்கு தமிழ்நாட்டிலிருந்து கமல்ஹாசன் புதிதாக நுழைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக கமல்ஹாசனுக்கு சமூக வலைத்தளங்களில் ஒரு பக்கம் ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வருகிறது.

இந்தத் தேர்தலில் அவருடைய கட்சி வெற்றி பெற்று அரசியலில் அவர் தொடர்வாரா அல்லது அமிதாப், சிரஞ்சீவி போல அரசியலை விட்டு விலகுவாரா என தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகளும், திரையுலகினரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

கமல்ஹாசனின் வெற்றி, தோல்வியை முன் மாதிரியாக வைத்து கூட ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஷங்கர் இயக்கத்தில் சிரஞ்சீவி?ஷங்கர் இயக்கத்தில் சிரஞ்சீவி? கெட்டவன்னு சொல்றதுலயும் ஒரு மாஸ் : ராகவா லாரன்ஸ் கெட்டவன்னு சொல்றதுலயும் ஒரு மாஸ் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in