Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

99 டிரைலரைக் கிண்டலடிக்கும் 96 ரசிகர்கள்

17 ஏப், 2019 - 11:43 IST
எழுத்தின் அளவு:
Fans-discourage-99-trailer

அறிமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையமைப்பில் விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த '96' படம், தமிழ் சினிமாவின் பெரிய வரவேற்பைப் பெற்ற படங்களில் ஒன்றாக உள்ளது.

இந்தப்படம் தற்போது '99' என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் ஆகி உள்ளது. ப்ரீத்தம் குப்பி இயக்கத்தில் அர்ஜுன் ஜன்யா இசையமைப்பில் கணேஷ், பாவனா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் டிரைலரை நேற்று யு டியுபில் வெளியிட்டார்கள். வெளியான சில மணி நேரங்களில் 96 படத்தையும் 99 படத்தையும் கம்பேர் செய்து பல மீம்ஸ்கள் வெளிவந்தன. அதில் பல மீம்ஸ்கள் 99 படத்தை கிண்டலடித்த மீம்ஸ்களாக இருந்தன.

பல தமிழ்த் திரைப் பிரபலங்களும் இப்படி படத்தைக் கிண்டலடிப்பது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர். உண்மையில் 99 படத்தின் டிரைலர் நன்றாகவே உள்ளது. தமிழில் என்ன ஒரு பீலிங்கைக் கொடுத்ததோ அதே அளவிற்கு பீலிங்காகவே இருக்கிறது.

தமிழில் எப்படி சிவகார்த்திகேயன் டிவியிலிருந்து சினிமாவுக்கு சென்று வெற்றி பெற்றாரோ அது போலத்தான் கணேஷ், டிவியிலிருந்து கன்னட சினிமாவில் அறிமுகமாகி முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். மலையாள நடிகையான பாவனா, தமிழில் 'சித்திரம் பேசுதடி, தீபாவளி, ஜெயம் கொண்டான், ஆர்யா” உள்ளிட்ட படங்களில் நடித்தவர். கன்னடத்திலும் பல முக்கியமான படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கென அங்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.

தமிழைப் போலவே கன்னடத்திலும் இப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹீரோவாக தோற்று, வில்லனாக ஜெயித்த அஸ்வின்ஹீரோவாக தோற்று, வில்லனாக ஜெயித்த ... துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா அப்டேட்ஸ் துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in