Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோவாக தோற்று, வில்லனாக ஜெயித்த அஸ்வின்

17 ஏப், 2019 - 11:25 IST
எழுத்தின் அளவு:
Ashwin-got-good-response-in-Natpae-Thunai

சமீபத்தில் வெளியான நட்பே துணை படத்தில் ஹிப் ஆப் ஆதிக்கு வில்லனாக வந்து பின்பு நண்பனாக மாறும் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆசிப்பாக நடித்தவர் அஸ்வின். இவர் இசை அமைப்பாளரும், வழக்கறிஞருமான ஜெரோம் புஷ்பராஜின் மகன். அப்பா தயாரிக்க, யானும் தீயவன் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தற்போது, நட்பே துணை படத்தின் மூலம் அவருக்கு ஒரு நல்ல அடையாளம் கிடைத்திருக்கிறது. அதோடு பஞ்சாக்ஷரம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது : சிங்கப்பூரில் மாஸ்டர் ஆப் பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்துவிட்டு, கை நிறைய சம்பளம், கெளரவமான வேலை என்று இருந்தேன். அதோடு டான்ஸ் ஸ்கூல், ஜிம்மும் நடத்தி வந்தேன். யானும் தீயவன் படத்தில் கதாநாயகனாக நடித்தேன். படம் வெளியான நேரத்தில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. அதனால் படம் வெற்றிபெறவில்லை.

பிறகு கூத்துப் பட்டறைக்கு சென்று பயிற்சி எடுத்தேன். அதற்கு கிடைத்த பரிசு தான் ஹிப் ஆப் ஆதியின் நட்பே துணை பட வாய்ப்பு. எனக்கு ஒரு நல்ல வேடம் கொடுத்த ஆதிக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இதில் தான் நடிப்பேன் என்று இல்லை. எந்த கேரக்டராக இருந்தாலும் சரி, ஹீரோ, வில்லன் எதுவாக இருந்தாலும் நடிக்க ஆர்வமாய் உள்ளேன். இசையிலும் ஆர்வம் உண்டு, நிறைய ஆல்பங்களை தயாரித்திருக்கிறேன். அடுத்து, வெப் சீரியல்களை தயாரித்து, இயக்கிக் கொண்டிருக்கிறேன். கலைத்துறையில் எனக்கும் மதிப்பு மிக்க இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்கிறார் அஸ்வின்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாபி சிம்ஹாவை இயக்கும் கோபி நயினார்பாபி சிம்ஹாவை இயக்கும் கோபி நயினார் 99 டிரைலரைக் கிண்டலடிக்கும் 96 ரசிகர்கள் 99 டிரைலரைக் கிண்டலடிக்கும் 96 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in