ஜெயம் ரவி படத்தை முடித்த நயன்தாரா | சிவாஜி 2வுக்கு வாய்ப்பு இருக்கிறது | புஷ்பா 2வில் விஜய்சேதுபதி இல்லை | ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா | வாரிசு என்பதால் மட்டுமே வெற்றி பெற முடியாது: அதிதி ஷங்கர் பதில் | விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு! | கவர்ச்சிக்கு மாறிய லாஸ்லியா! | செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ரெண்டகம் | விஜய் 67வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? |
7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற சாட்டை படத்தின் 2ம் பாகம், தற்போது தயாராகி வருகிறது. இந்தப் பட்ததிற்கு சாட்டை 2 என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அடுத்த சாட்டை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அன்பழகனே இந்தப் படத்தையும் இயக்குகிறார்.
முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி அதே ஆசிரியர் வேடத்தில் தொடருகிறார். இதுவும் பள்ளியில் நடக்கும் பிரச்னைகளை பற்றிய கதை அமைப்பு கொண்டது. அதுல்யா ரவி ஹீரோயினாக நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். சமுத்திரகனியின் நாடோடிகள் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
தற்போது, இதன் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. தற்போது பாடல்கள் சிங்கள் டிராக்காக வெளியிடப்பட்டு வருகிறது. மே மாதம் படம் வெளிவருகிறது.